அன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று ஏமி ஜாக்சனுக்கு: பாவம், ஃபீல் பண்ணுவாரோ?

By Siva

ஹைதராபாத்: அன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று நடிகை ஏமி ஜாக்சனுக்கு நடந்துள்ளது.

பாகுபலி 2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி வரும் மெகா பட்ஜெட் படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக ஆலியா பட்டும், ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக இங்கிலாந்தை சேர்ந்த டெய்சி எட்கர் ஜோன்ஸும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதில் டெய்சி தனிப்பட்ட காரணங்களால் படத்தில் இருந்து விலகினார்.

 ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

டெய்சி விலகிய பிறகு அவருக்கு பதில் ஏமி ஜாக்சனை நடிக்க வைக்க திட்டமிட்டாராம் ராஜமவுலி. இந்நிலையில் ஏமி தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகே ஏமியை நடிக்க வைக்கும் ஐடியாவை கைவிட்டாராம் ராஜமவுலி.

சிம்ரன்

சிம்ரன்

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் சிம்ரனுக்கு தான் கிடைத்தது. படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த சிம்ரன் படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகே அந்த வாய்ப்பு ஜோதிகாவுக்கு கிடைத்தது. சிம்ரனை போன்றே ஏமிக்கும் ஒரு அரிய வாய்ப்பு கை நழுவியுள்ளது.

குழந்தை

குழந்தை

ஆர்.ஆர். ஆர். வாய்ப்பு போனாலும் அதை நினைத்து ஏமி பெரிதாக வருத்தப்படப் போவது இல்லை. அவர் தாயான சந்தோஷத்தில் உள்ளார். கர்ப்ப காலத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு அவர் மீண்டும் நடிக்க வரும்போது ராஜமவுலியின் வேறொரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம், யார் கண்டது.

 நித்யா மேனன்

நித்யா மேனன்

டெய்சிக்கு பதில் நித்யா மேனனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆர்.ஆர். ஆர். படத்திற்காக தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறார். தெலுங்கு கற்பது மிகவும் கஷ்டமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X