எமி ஜாக்சன் வயிற்றில் ஆண்குழந்தையா? - வளைகாப்பு ட்வீட்

Recommended Video

ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்கறையுடன் சொன்ன குறிப்புகள்- வீடியோ

சென்னை: நடிகை எமி ஜாக்சனுக்கு அவரது கணவர் வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சியின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு தன் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை தான் என்று சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

நடிகை எமி ஜாக்சன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவர் தமிழில் மதராசபட்டினம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். பின்பு தமிழிலேயே ஐ, தங்கமகன், தெறி, கெத்து போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்பு அவருக்கு மற்ற மொழி திரைப்படங்களிலும் வாய்ப்பு தேடி வந்தது. அதைப் பயன்படுத்தி தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஓரு ரவுண்டு வலம் வந்தார். அவர் கடைசியாக நடித்த திரைப்படம் 2.0 மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.

எமி ஜாக்சன்

எமி ஜாக்சன்

இந்திய சினிமாவில் நடித்து வந்தாலும், அவ்வப்போது ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்து வருகிறார். வெகு சமீபத்தில் தான் எமி ஜாக்சனுக்கும், இவருடைய காதலர் ஜார்ஜ் பனையோட்டாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த ஃபோட்டோக்களையும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டிருந்தார்.

எமி கர்ப்பம்

எமி கர்ப்பம்

அதே போல் இவர்கள் இருவரும் மிக மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் எமி ஜாக்சன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இந்திய ரசிகர்களை சூடேற்றி வந்தார். இதற்கு ஒரு படி மேலே போய், தான் கர்ப்பமாக இருக்கும் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர். அதுமட்டுமின்றி அவர் கர்ப்பமான பிறகுதான் கல்யாணம் செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகியது.

எமிக்கு வளைகாப்பு

எமிக்கு வளைகாப்பு

கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சனுக்கு, அவருடைய கணவர் ஜார்ஜ் பனையோட்டா, வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த விழாவில் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார். வளைகாப்பு நிகழ்வு கனவு போல் இருப்பதாகவும் நடிகை எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

மகன் அதிர்ஷ்டசாலி

மகன் அதிர்ஷ்டசாலி

அதோடு தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நம்பிக்கையோடும் அதீத கனவோடும், இருப்பார் போல். அந்தக் கனவிலேயே, எனது ஆண் குழந்தையை நல்ல நண்பர்கள் மற்றும் சிறந்த குடும்பத்தினருடன் கொண்டாடும் அழகான பிற்பகல். தனது மகன் பல அற்புதமான பெண்களைக் தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி பையன். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்வதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X