ஷங்கர் மகிழும்படி ஒரு காரியம் செய்த ஏமி: வீடியோ இதோ
Recommended Video

சென்னை: தற்போது தான் ஷங்கர் மகிழ்ச்சி அடையும்படி நடந்து கொண்டுள்ளார் ஏமி ஜாக்சன்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது.
படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 370 கோடி வசூல் செய்துள்ளது.

புகைப்படங்கள்
2.0 படத்தின் ஹீரோயினான ஏமி ஜாக்சன் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படம் ரிலீஸாகும் நேரத்தில் இது போன்ற புகைப்படங்களை அவர் வெளியிடுவது ஷங்கருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது.

ஷங்கர்
ஷங்கருக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஏமி தன் இஷ்டம் போன்று கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது போன்ற புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று ஷங்கர் கேட்டுக் கொண்டும் அவர் நிறுத்தவில்லையாம். இந்நிலையில் தான் ஷங்கர் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு காரியம் செய்துள்ளார் ஏமி ஜாக்சன்.
படப்பிடிப்பு
2.0 படப்பிடிப்பை துவங்கும் முன்பு சில சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் சென்னைக்கு வந்தனர். இது எங்களின் முதல் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏமி. அந்த வீடியோ சுவாரஸ்யமாக உள்ளது என்றே கூற வேண்டும்.

வாங்க விளையாடலாம்
நேற்று வரை வாங்க ரம்மி விளையாடலாம் AMY என்ற கோடை பயன்படுத்துங்கள் என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார் ஏமி. இந்நிலையில் தான் அவர் 2.0 படம் குறித்த சுவாரஸ்ய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











