கணவருடன் கட்டிப்புரளும் நடிகை.. பாசம்னா இதுதான்.. பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை : தன் கணவனை இறுக்கமாக கட்டிபுரளும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் எமி ஜாக்சன்.

மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை தான் எமி ஜாக்சன். தமிழ் மட்டும் அல்லாமல் ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளில் வெற்றி கண்டவர். இவர் தமிழில் நடித்த அனைத்து படங்களுமே இவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தது.

தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விக்ரம், தனுஷ், விஜய் போன்றவர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர் .

முதல் வெற்றி

முதல் வெற்றி

சுதந்திரத்தை மையமாக வைத்து வெளிவந்து வெற்றியை கண்ட படம் தான் மதராசபட்டினம். வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் ஆர்யா. பல படங்கள் நடித்த ஆர்யாவிற்கு இப்படம் ஒரு வித்யாசமான அனுபவத்தை தந்தது என்றே சொல்லலாம். நாட்டை விட்டு வெளியேறும் வெள்ளையர்களின் கதாபாத்திரத்தில் எமி ஜாக்சன் நடித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்து பின் ஏற்படும் மாற்றங்கள் தான் கதை. அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து இருப்பார் எமி.

தனக்கு ஏற்ற கதாபாத்திரம்

தனக்கு ஏற்ற கதாபாத்திரம்

வெஸ்டர்ன் கலாச்சாரத்தை கொண்ட எமி, தனக்கு ஏற்றவாறு தகுந்த படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் 2.0 மற்றும் ஐ படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷுடன் நடித்த தங்கமகன் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடன் நல்ல பெயரை பெற்றார். தனக்கு ஏற்றப்போல கதாபாத்திரத்தை தேர்வு செய்துதான் இவரது ஸ்பெஷல்.

லிவ்விங் டூ கெதர்

லிவ்விங் டூ கெதர்

படங்களில் நடித்து கொண்டு இருக்கும் சமயத்திலேயே ஜார்ஜ் என்பவரை காதலித்தார். ஒரு கட்டத்தில் இருவரும், லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதில் அவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது தனது குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்துள்ளார் எமி.

குடும்பத்துடன் மகிழ்ச்சி

குடும்பத்துடன் மகிழ்ச்சி

எப்போதும் பிஸியாகவே இருந்த எமி, இந்த ஊரடங்கு சமயத்தில் தனது குழந்தையுடன் கொஞ்சுவது , விளையாடுவது ,என்று தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது வித விதமான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர். அந்த புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகின்றனர் .

கட்டிப்புரண்டு

கட்டிப்புரண்டு

அவர் சமீபத்தில் வெளியிட புகைப்படம் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. அது என்ன வென்றால், தனது கணவரை புல் தரையில் அமர்ந்து இருக்க எமி அப்படியே அவர் மடி மீது உட்காந்து கொண்டும், அப்படியே அவரை கட்டிப்பிடித்து கொண்டும் போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கருப்பு வெள்ளை நிறத்திலும், கலர் புகைப்படமாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Kollywood crazy Momma's | Sameera Reddy, Tamannah, Amy Jackson
அட என்ன பாசம்

அட என்ன பாசம்

இதனை பார்த்த ரசிகர்கள் பாசம்னா இதுதாயா என்று கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர். ஊரடங்கு சமயத்தில் தனது குடும்பத்துடன் நேரம் கழிக்கும் நடிகர், நடிகைகளுக்கு இந்த லாக்டவுன் ஒரு அருமையான தருணம் என்றே சொல்ல வேண்டும். எப்போதும் பிஸியாக இருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இதெல்லாம் ஓகே தான் எப்போ கல்யாணம் என்று எமியின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X