எமி ஜாக்சன் மகன் எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க.. புதிய காதலருக்கு லிப் லாக் முத்தம் வேற!

லண்டன்: மதராசப்பட்டினம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் தொழிலதிபரை நிச்சயம் செய்துக் கொண்டு அவரை பார்ட்னராக்கி வாழ்ந்த நிலையில், சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். அவருக்கு குழந்தையும் பிறந்த நிலையில், தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டு அவரை விட்டு விட்டு சென்றார். அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து நடிகரை காதலித்து வரும் எமி ஜாக்சன் தனது புதிய பார்ட்னருடன் டூர் அடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்த எமி ஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்த மிஷன் சேப்டர் 1 படம் இந்த ஆண்டு வெளியானது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான அந்த படம் ஹிட் ஆகியிருந்தால் தொடர்ந்து அடுத்தடுத்த சேப்டர்களை அவர் இயக்கியிருப்பார்.

Amy Jackson Heroine Ed Westwick AL Vijay Mission Chapter 1 1

எமி ஜாக்சனின் குழந்தை தற்போது நன்றாக வளர்ந்து விட்டதை இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக காணமுடிகிறது.

இங்கிலாந்து நடிகை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தாண்டவம், தெறி, ஐ, தங்கமகன், கெத்து, 2.0 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை பார்ட்னர் ஆக்கி குடும்ப வாழ்வில் செட்டில் ஆனார்.

மதராசப்பட்டினம் நடிகைக்கு மகன்: ஜார்ஜ் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் படு ஜாலியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க எமி ஜாக்சன் ஆர்வம் காட்டி வந்த நிலையில், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. நடிகை எமி ஜாக்சனுக்கு இன்னொரு நடிகருடன் ஏற்பட்ட காதல் காரணமாகத்தான் ஜார்ஜை விட்டு அவர் பிரிந்தார் என்றும் கூறுகின்றனர்.

amy jackson heroine ed westwick al vijay mission chapter 1 1

காதலருடன் டூர்: காஸிப் கேர்ள், வைட் கோல்ட், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் தற்போது டேட்டிங்கில் இருந்து வருகிறார் எமி ஜாக்சன். அவருடன் லண்டன் வீதிகளில் அடிக்கடி இரவு நேர பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனது குழந்தை மற்றும் காதலருடன் டூர் சென்றுள்ள வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரையும் பார்ட்னராக்கி திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

நல்லா வளர்ந்துட்டாரே: ஆண்ட்ரியாஸ் என தனது மகனுக்கு பெயர் வைத்து தன்னுடனே எமி ஜாக்சன் வளர்த்து வருகிறார். சொகுசு படகில் சுற்றுலா சென்று வரும் நிலையில், அந்த போட்டில் எமி ஜாக்சனின் மகன் குதித்து குதித்து ஜாலியாக விளையாடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அதே போல விமானத்தில் மூவரும் செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.

காதலருக்கு முத்தம்: எட் வெஸ்ட்விக் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் லிப் கிஸ் அடிக்கும் போட்டோவையும் எமி ஜாக்சன் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடைகளில் எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X