ச்சி.. லிப் லாக்கை விட இது மோசமா இருக்கே.. நாக்கு நாக்கை உரசி 2வது காதலருடன் எமி ஜாக்சன் பண்ண வேலை!

லண்டன்: மீண்டும் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடித்து வரும் நடிகை எமி ஜாக்சன் தனது இரண்டாவது காதலருடன் நாக்கு நாக்கை உரசி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

கடைசியாக ரஜினிகாந்தின் 2.0 படத்தில் ரோபோவாக நடித்து அசத்திய எமி ஜாக்சன் இங்கிலாந்து தொழிலதிபருடன் நிச்சயம் செய்துக் கொண்டு அவருடன் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றுக் கொண்டார்.

டைட்டானிக் பாணியில்

டைட்டானிக் பாணியில்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்தில் ரோஸ் என நடிகை கேட் வின்ஸ்லெட்டை கொண்டாடியது போல தமிழ் சினிமா ரசிகர்கள் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் அறிமுகமான எமி ஜாக்சனை கொண்டாடித் தீர்த்தனர். ஏ.எல். விஜய் இயக்கத்தில் மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்த எமி ஜாக்சனுக்கு தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன.

சூப்பர் ஸ்டார் ஜோடி

சூப்பர் ஸ்டார் ஜோடி

ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ படத்தில் அழகு மாடலாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த எமி ஜாக்சன் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்து கலக்கினார். ஆனால், அந்த படத்துடன் சினிமா நடிப்புக்கே பெரிய பிரேக் கொடுக்கும் விதமாக ஜார்ஜ் பன்னாயுட்டு எனும் தொழிலதிபரை பார்ட்னராக ஆக்கிக் கொண்டு மீண்டும் லண்டனில் செட்டில் ஆனார் எமி ஜாக்சன்.

குழந்தை பிறந்தவுடன் பிரிவு

குழந்தை பிறந்தவுடன் பிரிவு

ஜார்ஜ் பன்னாயுட்டுவை நிச்சயம் செய்து கொண்ட நிலையில், திருமணம் செய்யாமல் அவரை பார்ட்னராக ஏற்றுக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த எமி ஜாக்சன் அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்து ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்து முதல் பிறந்தநாள் வரை கணவருடன் கொண்டாடினார். ஆனால், அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

2வது காதலர்

2வது காதலர்

அடுத்ததாக அமெரிக்க நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வரும் எமி ஜாக்சன் தனது காதலருடன் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் எடுத்துக் கொண்ட ஹாட் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் எமி ஜாக்சன்.

நாக்கு நாக்கு உரசி

நாக்கு நாக்கு உரசி

காதலர் தினத்தை முன்னிட்டு ஹாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தங்களின் காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், நடிகை எமி ஜாக்சன் ஒரு ஸ்டெப் மேலே சென்று காதலரின் நாக்குடன் தனது நாக்கு உரசும் செம ரொமான்டிக்கான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில்

மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில்

சினிமாவில் 80 வயதானாலும் நடிப்பேன் என ஒரு முறை பேட்டியில் நடிகை எமி ஜாக்சன் கூறியிருந்தார். இங்கிலாந்து வெப் தொடர்களில் நடித்து வந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் அருண் விஜய்யின் அச்சம் என்பது இல்லையே படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களையும் சமீபத்தில் ஷேர் செய்திருந்தார் எமி ஜாக்சன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X