2.O காஸ்ட்யூமை பார்த்து மிரண்டு போன எமி ஜாக்ஸன்!
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது.
படத்தில், இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக வேண்டியுள்ளது. விரைவில் அந்தப் பாடல் காட்சி படமாகும் எனத் தெரிகிறது.
அந்தப் பாடலில் நடனமாடவுள்ள ஹீரோயின் எமி ஜாக்ஸன், அவருக்கான ஆடைகளை அணிந்து பார்ப்பதற்காகச் சென்னைக்கு வந்துள்ளார்.

ஷங்கர் ஸ்பெஷல் :
ஷங்கரின் படங்களில் பாடல் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை மிரள வைக்கும் விதத்தில் இருக்கும். அரங்கக் காட்சியாக இருந்தாலும், வெளிப்புறப் படப்பிடிப்பாக இருந்தாலும், நடனம், பின்னணியில் நடனமாடுபவர்கள், ஆடைகள் அனைத்துமே அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

2.O விலும் தொடரும் :
ஷங்கரின் ஒவ்வொரு படங்களின் பாடல்களிலும் அவரது தனித்துவத்தைப் பார்க்கலாம். '2.O' படத்தில் அது வேறு ஒரு தளத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது படத்தின் நாயகி மூலமாகவே வெளிப்பட்டுள்ளது.
ஷங்கருக்கு பாராட்டு :
ஆடைகளின் வடிவமைப்பையும், அழகையும் அணிந்து பார்த்து ஆச்சரியப்பட்டுள்ள எமி ஜாக்ஸன், 'வாவ்... ஆடைகள் அனைத்தும் அடுத்த லெவல்... ஷங்கரின் பார்வை அற்புதம்' எனப் பாராட்டியுள்ளார்.
வெய்ட்டிங் :
ஏ.ஆர்.ரஹ்மானின் செமையான இசைப்பதிவு ஆல்பத்துக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.
இந்தியன் ஸ்பீல்பெர்க் :
ஷங்கர் தான் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆஃப் இந்தியன் சினிமா. இந்திய சினிமாவின் மாற்றத்திற்காகக் காத்திருக்கிறேன்.
க்ரேட் நியூஸ் :
ஓ.. நீங்க காஸ்ட்யூம்ஸ்லாம் ட்ரை பண்ணிப் பார்த்தீங்களா... க்ரேட் நியூஸ். ப்ராவோ! (நமக்கு மட்டும்தான் கலாய்க்கிற மாதிரி தெரியுதோ)
செம்ம காஸ்ட்யூம் :
இது செம்ம காஸ்ட்யூம் என எமி ஜாக்ஸன் முன்பு பதிவேற்றிய புகைப்படத்தை போட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.


Click it and Unblock the Notifications











