கடல் கன்னியாக மாறிய அனேகன் பட நடிகை!

சென்னை : தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை அமைரா தஸ்தூர் இப்பொழுது வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தாண்டக் வெப்சீரிஸில் நடித்திருந்த இவர் அதைத்தொடர்ந்து டோங்கிரி டு துபாய் என்ற வெப்சீரிஸிலும் நடித்துவருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் அமைரா கடற்கரையில் கடல் கன்னி போல் அம்சமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் கடல்கன்னி என வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் அனேகன்

தமிழில் அனேகன்

ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு எக்கச்சக்கமான அழகில் பளீரென்ற தேகத்தில் மனதை மயங்க வைக்கும் நடிகை அமைரா தஸ்தூர் தமிழில் அனேகன் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

ஹாலிவுட் படங்களிலும்

ஹாலிவுட் படங்களிலும்

மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தமிழில் வெற்றி பெற அதைத்தொடர்ந்து அமைராவுக்கு பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் கை நிறைய திரைப்படங்கள் கிடைத்தது.அதில் முழு கவனத்துடன் நடித்துவந்த தோடு குங்ஃபூ யோகா உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

மூன்று கண்களுடன்

மூன்று கண்களுடன்

தமிழில் முதல் படம் வெற்றி பெற்றபோதும் இரண்டாவது படத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்க இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று பஹீரா. இதில் பிரபுதேவா ஹீரோவாக வித்தியாசமான ஹாரர் ரோலில் மூன்று கண்களுடன் நடித்துள்ளார்.

கடல்கன்னி அமைரா

கடல்கன்னி அமைரா

பஹீராவைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யா நந்தா படத்தில் நடிக்கும் அமைரா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதில் மெருன் கலர் வெல்வெட் டிரஸ்ஸில் மினுமினுக்க கடற்கரையில் கடல்கன்னி போன்று அட்டகாசமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த பலரும் கடல்கன்னி என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X