நான் அழகானவளா இருக்க விரும்பலை.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் மெசேஜ்.. கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள போட்டோவையும் கவிதைத்தனமான கேப்ஷனையும் நெட்டிசன்ஸ் வைரலாக்கி வருகின்றனர்.
Recommended Video
தனுஷ் ஜோடியாக, அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், அமைரா தஸ்துர். படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார்.
இதில், சிறப்பாக நடித்திருந்த இவர், பிறகு இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

பைனான்ஸ் பிரச்னை
ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, காலாகாண்டி, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில், சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கினார். முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது.

இன்ஸ்டாகிராம்
இவர், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வெளியிடுவது வழக்கம். அதைப் பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் இப்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதுவும் வைரலாகி வருகிறது.

கவிதையாக கேப்ஷன்
ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஸ்பெஷலாக, கவிதையாக கேப்ஷன் கொடுக்கும் அமைரா, இந்தப் படத்துக்கும் கவித்துவமாக கேப்ஷன் கொடுத்துள்ளார். அதில், 'நான் அழகானவளாக இருக்க விரும்பவில்லை. மாறாக, வேறொரு உலகைச் சேர்ந்தவளாக, மர்மமானவளாக, சூனியக்காரியாக, சாகசக்காரியாக, கொஞ்சம் பயமுறுத்துதவளாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

சூப்பரான அழகு
இதற்கு ரசிகர்கள் சிலர், எதுக்கு இந்த ஆசை?' என்று கேட்டுள்ளனர். 'உங்களுக்கு விரும்பமில்லைன்னாலும் நீங்க சூப்பரான அழகு' என்று சிலர் தெரிவித்துள்ளனர். அப்படியே செவ்வாய்க்கிரகம் போயி புது அழகியா வர்றீங்களா? என்று சிலரும் நீங்க அணு ஆயுதம் மாதிரி, அழகு ஆயுதம் என்று சிலரும் கூறியுள்ளனர்.

வேற லெவல்
உங்களை அநியாயத்துக்குப் பிடிக்கும்னா, உங்க கேப்ஷனை அதுக்கும் மேல பிடிக்குது என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். 'வழக்கமான டிரெஸ்லயே இவ்வளவு அழகா இருக்கீங்களே..நீங்க வேற லெவல்' என்று சிலர் தெரிவித்துள்ளனர். நீங்க அழகில்லைன்னு யாரு சொன்னா? இந்த உலகத்துலயே நீங்கதான் பேரழகி என்று சிலர் ஓவராக வழிந்துள்ளனர். இந்த போட்டோவை ஏராளமான நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











