தாறுமாறாக லைக்குகளை அள்ளும் அமைரா தஸ்துரின் பிகினி ஃபோட்டோ
சென்னை : 2015 ம் ஆண்டு தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அமைரா தஸ்துர். இவர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலேயே அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்தி படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி வந்த அமைரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறார். இதனால் தமிழ் ரசிகர்களிடம் இந்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

இன்ஸ்டாகிராமிலும் பிசி
படங்களில் பிசியாக இருந்து வந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அமைரா. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார்.

அமைராவின் பிகினி ஃபோட்டோ
அந்த வகையில் நேற்று, நீச்சல் குளத்தில் ஆரஞ்சு நிற பிகினியில் இருப்பது போன்ற பின்னழகை மட்டும் காட்டிய ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் கமெண்ட் செய்திருந்தனர்.

லைக்குகளை குவிக்கும் ஃபோட்டோ
இந்நிலையில் இன்று, நீச்சல் குளத்தின் அருகே, கருப்பு நிற பிகினியில் படுத்திருப்பது போன்ற ஃபோட்டோவை அமைரா பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவை அவர் பதிவிட்ட 15 நிமிடங்களுக்குள் 32,000 க்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்து விட்டனர். தொடர்ந்து இந்த ஃபோட்டோவிற்கு லைக் மற்றும் பார்வைகள் குவிந்து வருகிறது.
Recommended Video

தீயாய் பரவும் ஃபோட்டோ
அமைரா கூலாக படுத்திருக்கும் இந்த ஃபோட்டோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில் அவரின் பிகினியில், Hot Sauce என எழுதப்பட்டிருப்பதை பற்றி தான் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராமில் அமைராவை 2.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











