ஐயையைய.. இந்த 'பொயட்டு'ங்க தொல்லை தாங்க முடியலையே..அந்த ஹீரோயினோட கண்களின் ஒளியை பாதுகாக்கணுமாம்!
சென்னை: நடிகை அமைரா தஸ்துர் வெளியிட்டுள்ள போட்டோவுக்கு ரசிகர்கள் கவிதையாக அவரை வர்ணித்து வருகின்றனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள், இதன் பாதிப்பில் சிக்கியுள்ளன.
அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளையும் எடுத்துவருகின்றன.

கொரோனா
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. ஊரடங்கு விதிக்கப்பட்டும் இந்த வைரஸ் சில மாநிலங்களில் கட்டுக்குள் இல்லாததால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்துள்ளது.

ஊரடங்கு
இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் திரைத்துறையினரும் வீடுகளில் அமைதியாக இருந்து வருகின்றனர்.

நடிகர், நடிகைகள்
இதனால், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நடிகர், நடிகைகள் வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் நடிகை அமைரா தஸ்துரும் ஒருவர். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார்.

புகைப்படங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது. இப்போது த மேகஸின் கோடை இதழுக்காக அவர் கொடுத்துள்ள போஸை பதிவிட்டுள்ளார். செம கிளாமராக இருக்கும் அந்த போட்டோவுக்கு ரசிகர்கள் பலர், ஜாலியாக கமென்ட் போட்டுள்ளனர். சிலர் அவரது அழகை கவிதையாக வர்ணித்துள்ளனர்.

பழைய ஸ்டைல்
ஒருவர், உங்கள் கண்கள் பிரகாசமாக மின்னுகிறது. அதன் ஒளியை நான் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னொரு பொயட், 'இந்த உலகத்தில் உள்ள அழகிக்கெல்லாம் நீங்கள்தான் தலைவி' என்கிற ரீதியில் குறிப்பிட்டுள்ளனர். இன்னொருவர், இவள் மட்டும் ஏன் இப்படி அழகாக இருக்கிறாள். என்னிதயம் என்னிடம் இல்லை என்கிற பழைய ஸ்டைல் கவிதையை குறிப்பிட்டிருக்கிறார்.

அமைரா என்றால்
இன்னொருவர், அழகின் ஐகான் நீங்கள் என்று கூறியிருக்கிறார். உங்கள் பெயருக்கான அர்த்தத்தை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். அமைரா என்றால் இளவரசி என்று பொருள் என்று காதல் சின்னத்துடன் தெரிவித்திருக்கிறார், ஒருவர். அமைராவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

குங்க் பூ யோகா
நடிகை அமைரா, தனுஷ் ஜோடியாக, அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, காலாகாண்டி, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில், சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கினார். முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











