twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதையெல்லாம் ஏத்துக்கவே முடியாது.. குஜராத் கோயிலில் கூட்டமாக கூடிய பெண்கள்.. பிரபல நடிகை விளாசல்!

    |

    மும்பை: கொரோனா பரவலால் கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், குஜராத்தின் சனாந்த் தாலுகாவில் உள்ள கோயில் ஒன்றில் பெண்கள் கூட்டமாக கூடி பூஜை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே கும்பமேளாவில் கூடிய கூட்டத்தை எதிர்த்து பலரும் கொந்தளித்து வந்த நிலையில், தனுஷின் அனேகன் படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் தற்போது இந்த நிகழ்வை விளாசி ட்வீட் போட்டுள்ளார்.

    7 பேர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும்… இயக்குனர் நவீன் நம்பிக்கை !7 பேர் விடுதலையை புதிய அரசு நிறைவேற்றும்… இயக்குனர் நவீன் நம்பிக்கை !

    கடவுள்கள் கோபமாக உள்ளதால் தான் கொரோனா பரவி வருகிறது என மதகுரு ஒருவர் கூறியதை அடுத்து இப்படி பெண்கள் ஒன்று கூடி வழிபாடு நடித்தி உள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2 கோடி பேர் பாதிப்பு

    2 கோடி பேர் பாதிப்பு

    கடந்த வருடம் 1000 கணக்கானோர் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் அதிரடியாக லாக்டவுன் போடப்பட்டது. ஆனால், தற்போது 2 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் லாக்டவுன் ஒன்றே இதனை தடுக்க தீர்வு என்கிற குரல்கள் எழுந்துள்ளன.

    குடமேந்தி வந்த பெண்கள்

    குடமேந்தி வந்த பெண்கள்

    கொரோனாவால் நாடு முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சனாந்த் தாலுகாவில் உள்ள பலியாதேவ் கோயிலில் பெண்கள் பெருங்கூட்டமாக திரண்டு குடங்களில் புனித நீரேந்தி வந்து வழிபாடு நடத்தியது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

    கோபத்தில் கடவுள்கள்

    கோபத்தில் கடவுள்கள்

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் இப்படி அதிகரிக்க காரணமே கடவுள்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால் தான் என மதகுரு ஒருவர் சொன்னதை கேட்டே அந்த இடத்து பெண்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வந்து வழிபாடு செய்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    23 பேர் மீது வழக்கு

    23 பேர் மீது வழக்கு

    செவ்வாய்க்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக நவபுரா கிராமத்தை சேர்ந்த 23 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அமைரா தஸ்தூர் விளாசல்

    சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்த பலரும் கண்டனம் எழுப்பி வரும் நிலையில், தனுஷின் அனேகன் படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் தனது ட்விட்டர் பக்கத்தில் "Unacceptable" என அந்த வீடியோவை ஷேர் செய்து விளாசித் தள்ளி உள்ளார்.

    Recommended Video

    Idhaiyathai Thirudathe Hima Bindhu Birthday Surprise | Navin, Bindhu
    கொரோனா சேவை

    கொரோனா சேவை

    சமூக நலனில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை அமைரா தஸ்தூர் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ படுக்கை வசதிகள் தொடர்பான ட்வீட்களையும் உதவிகளையும் செய்து வருகிறார். கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற யோசனைகளையும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Anegan actress Amyra Dastur tweeted, “Unacceptable” after watching video of women mass gathering to temple at Sanand, Gujarat.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X