ஃபோட்டோ கேப்ஷனுக்கு ஜான் கீட்ஸ் கவிதை.. தனுஷ் நாயகியை 'பொயட்டிக்'காக வர்ணிக்கும் ரசிகர்கள்!

By

சென்னை: பிரபல ஹீரோயின் தனது போட்டோவுக்கு ஜான் கீட்ஸின் கவிதையை பயன்படுத்தி இருப்பதை அடுத்து அவரை நெட்டிசன்ஸ் கவிதைத்தனமாக வர்ணித்து வருகின்றனர்.

Recommended Video

தனுஷ் ஹீரோயின் சொல்றத கேளுங்க | உள்ளங்காலில் ஸ்வஸ்திக் பச்சை- வீடியோ

லாக்டவுன் நேரத்தில் பெரும்பாலான நடிகைகளின் தவிர்க்க முடியாத தோழியாகி இருக்கிறது இன்ஸ்டாகிராம்.

தினமும் தங்களது செல்ல விளையாட்டுகளை, ஒர்க் அவுட், நடனம், சமையல் உள்ளிட்ட புகைப்படம் மற்றும் வீடீயோக்களை இதில் பதிவேற்றுவது அவர்களது வாடிக்கையாகி விட்டது.

இன்ஸ்டா இல்லாமல்

இன்ஸ்டா இல்லாமல்

இதற்கு உடனடியாக கிடைக்கும் ரசிகர்களின் கமென்ட்களில் மெய்மறக்கிறார்கள் நடிகைகள். இதற்காகவே பல ரசிகர்கள் லைக்ஸ்களையும் கருத்துக்களையும் அள்ளித் தெளிக்கின்றனர். பெரும்பாலான நடிகைகளுக்கு பல லட்சங்களை தாண்டிய பாலோயர்கள் இருக்கின்றனர். சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் போலிருக்கிறது, இன்ஸ்டா இல்லாமல் இனி அவர்களால் இருக்க முடியாது.

தனுஷ் ஜோடியாக

தனுஷ் ஜோடியாக

அந்தளவுக்கு ஒன்றி இருக்கிறார்கள் ஹீரோயின். இதில் அடிக்கடி போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிடுபவர்களில் ஒருவராக இருக்கிறார், இந்தி நடிகை அமைரா தஸ்துர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக, அனேகன் படத்தில் நடித்தவர். கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் முன்னாள் ஹீரோ கார்த்திக் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஓடி ஓடி உழைக்கணும்

ஓடி ஓடி உழைக்கணும்

இந்தப் படத்துக்குப் பிறகு இந்தியில் கவனம் செலுத்தி வரும் அமைரா, ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை மணிகண்டன் இயக்குகிறார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக தொடங்கவில்லை.

ஜான் கீட்ஸ் கவிதை

ஜான் கீட்ஸ் கவிதை

இந்நிலையில், அமைரா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன. வழக்கமாக ஒவ்வொரு போட்டோவுக்கும் அழகாக கேப்ஷன் கொடுக்கும் இதற்கு, 'அவள் கூந்தல் நீளமானது, அவள் பாதங்கள் மென்மையானவை, அவள் கண்கள் வனமாக இருந்தன' என்ற பிரபல ஆங்கில கவிஞர் ஜான் கீட்ஸிஸ் கவிதை வரிகளை பயன்படுத்தி இருக்கிறார்.

பாதுகாக்க வேண்டும்

பாதுகாக்க வேண்டும்

இதற்கு நெட்டிசன்களும் கவிதையாகவே கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். இந்த கவிதை வரிகள், தேவதைகளுக்கு சரியாகப் பொருந்துகின்றன. குறிப்பாக உங்களுக்கு என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஒருவர், உங்கள் கண்கள் மயக்குகின்றன, அதன் ஒளியை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உங்கள் உடல் பெரும் சக்தி, புன்னகை வாள் போல் இருக்கிறது என்று ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

இந்த போட்டோவை அப்படியே 'நாசா'வுக்கு அனுப்பி வையுங்க, ஏன்னா அவங்கதான நட்சத்திரங்களை ஆராய்ச்சி பண்றாங்க என்று கெக்கேபிக்கே செய்திருக்கிறார் ஒருவர். நீங்க இயற்கையிலயே அழகு, அதனால மேக்கப் வேண்டாம் என்று அட்வைஸ் செய்துள்ளனர். இன்னும் சிலர் அவரை வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X