பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சென்றவர் மீண்டும் பிறந்த வீட்டிற்கு வருகிறார்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளர் நடிகர் மற்றும் பலரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர் தான் ஆதவன்.
இவரது காமெடிகள் மற்றும் ஷோகளில் இவர் செய்யும் செயல்கள் அனைத்தும் பலரையும் கவர்ந்தது.
விஜய் டிவியில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார் ஆதவன்..அங்கு இருந்து பிரபலமான இவர் பின்னாளில் சன் டிவியில் சேர்ந்தார். இங்கு பல நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

இவர் சன் குழுமத்தில் வரும் ஒரு சேனலான ஆதித்யா சேனலில் இவர் தொகுத்து வழங்கிய கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி இன்று வரை ஒரு டிரென்டாக உள்ளது.இந்த ஒரு நிகழ்ச்சியை பலரும் பார்ப்பர்.
சின்னத்திரையில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ஸ்டைல் மற்றும் தனி மேனரிசம் உண்டு. இவர் கடி ஜோக்ஸ்காகவே பல ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள்.
இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து உள்ளார். பிரியாணி,காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் நடித்து உள்ளார் ஆதவன்.இவருக்கு ஸ்பெஷலே பல குரலில் பேசி அசத்துவார் குறிப்பாக பாக்யராஜ் போல் இவர் பேசுவது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
தற்போது இவர் மீண்டும் இவர் விஜய் டிவிக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள கலக்க போவது யாரு ஷோவில் நடுவராக இருக்க போகிறார். எங்கிருந்து வந்தாரோ அதே இடத்திற்கு மீண்டும் செல்கிறார் ஆதவன் அதாவது தனது பிறந்த வீடான விஜய் டிவிக்கு செல்லவிருகிறார். எங்கு வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் பிறந்த வீடு தான் அனைவருக்கும் சொந்தம்.கண்ட்ஸ்டெண்டாக இருந்த ஆதவன் இப்போது ஜட்ஜ் என்று உயந்தது தான் மாபெரும் வெற்றி . அதே மேடை அதே நிகழ்ச்சி ஆனால் கடந்து வந்த பாதை இவர் வெற்றிக்கு பதில் சொல்லும்


Click it and Unblock the Notifications











