பட வாய்ப்பு இல்லை: வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
மும்பை: பிரபல நடிகர் ஒருவர் பட வாய்ப்புகள் இல்லாததால் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார்.
பிளாக் ஃபிரைடே, குலால், பாட்டியாலா ஹவுஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாவி சித்து. அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் பண பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஒரு இடத்தில் வாட்ச்மேன் வேலைக்கு சேர்ந்தார்.

வாட்ச்மேன்
சாவி சித்து பற்றிய வீடியோ வெளியானதை பார்த்த பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், இயக்குநர் அனுராக் கஷ்யப் ஆகியோர் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். அனுராக் கஷ்யப் தான் சாவி சித்துவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்தார்.
ராஜ்குமார் ராவ்
வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முடங்கிவிடாமல் வாட்சமேன் வேலைக்கு சென்ற சாவி சித்துவை ராஜ்குமார் ராவ் பாராட்டியுள்ளார். மேலும் சாவி சித்துவுக்கு உதவு செய்வதாகவும் கூறியுள்ளார்.

பணம்
வாட்ச்மேன் வேலை பார்ப்பது குறித்து சாவி கூறியதாவது, தினமும் 12 மணிநேரம் வேலை. பேருந்தில் டிக்கெட் எடுக்கக் கூட காசு இல்லை. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது எல்லாம் கனவு மாதிரி ஆகிவிட்டது. என் நிதி நிலை சரியில்லை என்றார்.

அனுராக் கஷ்யப்
சாவி சித்து பற்றி அனுராக் கஷ்யப் கூறியிருப்பதாவது, சாவி சித்துவை ஒரு நடிகராக மதிக்கிறேன். அவரை நான் மூன்று முறை என் படங்களில் நடிக்க வைத்துள்ளேன். பட வாய்ப்பு கிடைக்காவிட்டால் பலர் மதுவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது சித்து மரியாதையுடன் வாழ வேலைக்கு சென்றதை மதிக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











