twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துளசி, திவ்யா... இப்போ அழகம்மை ரசிகர்களுக்கு என்றும் பிடித்த ரேவதி

    |

    சென்னை: அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தி நடிப்பது தான் ஒரு நடிகரின் பிளஸ் பாயிண்ட். அப்போது தான் அவர் ஓர் நல்ல நடிகர் எனப்படுவார் என்று நடிகை ரேவதி ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், பவர் பாண்டி படத்தில் நடித்ததன் மூலம் மன உளைச்சலில் இருந்த தனக்கு தன்னம்பிக்கை அதிகரித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும், நம் தமிழ் சினிமாவில் ஒரு ராஜகுமாரியாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. 1983ஆம் ஆண்டு வெளியான மண் வாசனை படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முத்து நம்மையெல்லாம் அவரின் நடிப்பு, நடனம், அழகு, திறமை மூலம் கட்டிப்போட்டவர்.

    An actor should be match an all characters-Actress Revathi

    தமிழ் சினிமாவின் அன்றைய ஹீரோக்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார் ரேவதி. தற்போது, பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டும் அல்லாமல் சின்னத்திரை மூலமாகவும் அழகம்மையாக நம் வீட்டிற்குள் தினமும் கதவை தட்டி உள்ளே நுழைபவர்.

    சமீபத்தில் ஓர் நேர்காணலின் போது, அவரின் சினிமா வாழ்க்கையை பற்றின பல இனிமையான தருணங்களை பகிர்ந்து கொண்டார் அந்த சின்ன குயில். அவரின் இயற்பெயரான ஆஷா கேளுண்ணி என்ற பெயரை ரேவதி என்று மாற்றிய போது அவருக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. பிறகு அவர் அந்த பெயரையே ரசிக்க ஆரம்பித்தாராம்.

    An actor should be match an all characters-Actress Revathi

    சமீபத்தில் வெளியான ஜாக்பாட் திரைப்படம் மூலம் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இருவருக்கும் அப்போது தான் அறிமுகம் கிடைத்தாலும் ஜோதிகா மிகவும் எளிதில் பழக கூடியவர் என்றார். சிறு வயது முதலே ரேவதியின் பெற்றோர் அவரை ஒரு ஆண்பிள்ளை போல வளர்த்ததால், அவருக்கு ஸ்கூட்டர், பைக் என அனைத்து வாகனங்களையும் நன்றாக ஓட்ட தெரிந்திருந்ததால் தான் மகளிர் மட்டும் படத்தில் புல்லெட் ஓட்டுவது மிகவும் எளிதாக இருந்தது என்றார்.

    தேவர் மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகா பாடலில், ரேவதி ஒரு வரியை பாட வேண்டும் என்று வலியுறுத்தி அதற்காக மறுபடியும் படப்பிடிப்பில் இருந்த ரேவதிக்காக காத்திருந்து பாடல் ரெகார்ட் செய்துள்ளார் இளையராஜா. இந்த படத்திற்காக ரேவதிக்கு தேசிய விருது கிடைத்தது கவனிக்கத்தக்கது.

    An actor should be match an all characters-Actress Revathi

    அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தி நடிப்பது தான் ஒரு நடிகரின் பிளஸ் பாயிண்ட். அப்போது தான் அவர் ஓர் நல்ல நடிகர் எனப்படுவார். அந்த வகையில் எனக்கு அமைந்த அனைத்து வாய்ப்புகளையும் நான் சிறப்பாக ஒரு தண்ணீரை போல, அது போகும் போது, அதனோடு இணைந்தே சென்றேன்.

    நடிப்புலகத்தில் மட்டும் இல்லாமல் பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் ரேவதி. குறிப்பாக மின்சார கனவு திரைப்படத்தில் கஜோலுக்கும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் தபுவிற்கும் குரல் கொடுத்துள்ளார் ரேவதி. மேலும் தேவ ராகம் என்ற மலையாளப்படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு குரல் கொடுத்துள்ளார் ரேவதி.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில், பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மன உளைச்சலில் இருந்த தனக்கு தன்னம்பிக்கை அதிகரித்தது என்று கூறுகிறார் நடிகர் ரேவதி. தனுஷ் மிகவும் சுறுசுறுப்பான திறமையான ஒரு மனிதர். அவருடன் இணைந்து பணிபுரிந்தது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

    புன்னகை மன்னன் படத்தின் தீம் பாடல் மிகவும் அற்புதமான ஒரு பாடல். அந்த பாடலுக்கு நடனம் ஆடியது மிகவும் கடினமாக இருந்தாலும் பல பயிற்சிகளுக்கு பிறகு ஆடியதால் மிகவும் சுலபமாக அமைந்தது. இளையராஜா இசையில் ஏ.ஆர். ரகுமான் வாசித்த அந்த பாடலின் இசை, நம் தமிழ் சினிமாவின் ஒரு மைல் கல்.

    ரேவதி ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் அணிவதை வசதியாக எண்ணினாலும், அவரது விருப்பம் தமிழ் கலாச்சாரமான புடவை தானாம். இரவில் ஒரு பகல் என்று தூர்தர்ஷனில் ஒளிபரப்பான சீரியல் மூலமே சின்ன திரைக்கு அறிமுகமானவர். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அழகு சீரியல் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் ரேவதி. அனைவரது இல்லங்களிலும் அவர்களோடு ஒருவராகி அழகம்மையாக வாழ்கிறார் ரேவதி. சீரியல்களில் நடிப்பது தனக்கு மிகுந்த சந்தோஷத்தையை அளிக்கிறது என்றார்.

    தமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது... ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி!தமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது... ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி!

    ரேவதி தனது ரசிகர்கள் குறித்து கூறுகையில், அந்த காலத்தில் ரசிகர்கள் தங்களது விருப்பமானவர்களுக்கு கடிதம் மூலம் தங்களது அன்பினை வெளிப்படுத்துவர். அது போல ரேவதிக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. ஒரு ரசிகர் தன்னுடைய ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்பினார். அது மனதிற்கு மிகவும் நெருடலாய் இருந்தது. ஒரு ரசிகர் 15 பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதை நான் இன்றும் பத்திரமாக பொக்கிஷமாக வைத்துள்ளேன், என்றார்.

    வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்வது தான் ஒரு உண்மையான நடிகனின் அர்த்தம். அதை நான் சிறப்பாக செய்துள்ளேன் என்ற திருப்தியும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்று மிகவும் பெருமிதத்தோடு கூறினார் ரேவதி.

    இந்த சின்னக் குயிலின் வெற்றிப் படங்கள் ஒன்றா இரண்டா பட்டியலிட. துளசி, திவ்யா, பஞ்சவர்ணம், தாயம்மா என் பல கதாபாத்திரங்களாகவே நம் முன் வாழ்பவர் தான் ரேவதி. அவரின் திறமையான யதார்த்தமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் இன்றும் உள்ளனர். அவரின் கலை பயணம் மேலும் தொடர் வாழ்த்துக்கள்.

    English summary
    The plus point of an actor is to match all the characters. It is only then that he is known as a good actor, and I have done that very well, ”Actress Revathi told a media briefing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X