நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு
மும்பை: தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஒருவர் நடித்த பாலிவுட் படம் அவருக்கு கை கொடுக்கவில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த இளம் அழகி. கோலிவுட்டில் ராசியில்லாதவர் என்று பெயர் எடுத்தார். தற்போது தான் அந்த நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தி படம் ஒன்றில் நடித்தார். இந்த படம் நமக்கு கை கொடுக்கும், பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என்று மிகவும் நம்பினார். ஆனால் அந்த படத்தில் நடித்த உயர்ந்த நடிகை பெயர் வாங்கிவிட்டார்.
படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் அந்த உயர்ந்த நடிகை தான் படத்தின் ஹீரோ, அந்த அளவுக்கு நடிப்பால் அசத்திவிட்டார் என்கிறார்கள். இங்கிருந்து சென்ற அழகியின் நடிப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே தெலுங்கு திரையுலகிலும் அவருக்கு பிரச்சனையாக உள்ளது. ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆவதும், விலக்கப்படுவதுமாக உள்ளார். அவர் படங்களை தேர்வு செய்வதில் தவறு செய்வதாக கூறப்படுகிறது.
தவறு செய்வது இயற்கையே, அதை அவர் திருத்திக் கொண்டால் கெரியர் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











