நயன்- விக்கி வாயை திறக்க வேண்டும்.. கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார்!
சென்னை : வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் ஜோடி, கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணமான 4 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 9ம் தேதி அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இது குறித்த தகவலை விக்னேஷ் சிவன் வெளியிட்டதிலிருந்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

நயன்- விக்கி மீது வழக்குப்பதிவு
இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் கே.எல்.சார்லஸ் அலெக்ஸாண்டர் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து பல கட்டங்களாக முயற்சி செய்து குழந்தை பிறக்க வாய்பில்லை என்கிற நிலையில் தான் செயறக்கை முறை கருத்தரிப்பு செய்ய முடியும் இதுதான் Surrogacy (Regulation)Rules 2022ன் படி விதி.

இரட்டை ஆண் குழந்தை
சட்டத்திற்கு புறம்பாக 9/6/2022 அன்று திருமணம் செய்து 9/10/2022 அன்று தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ள திரு.விக்னேஷ் சிவன் மற்றும் திருமதி.நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் செயற்கை முறை கருத்தரிப்பு சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது ஏற்புடயதல்ல. மேலும் இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளது

சட்டத்தை மீறிய செயல்
சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள மேற்குறிப்பிட்ட தம்பதியினர் மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள சட்ட விதிகளை பின்பற்றாமல் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றிருப்பது தவறான முன் உதாரனத்தை ஏற்படுத்தும் சமூகத்தை சீர்கெடுக்கும் எனவே Assisted Reproductive technology முறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நடைபெற்றதா என்பதை திரு.விக்னேஷ் சிவன் மற்றும் திருமதி.நயன்தாரா ஆகியோர் சமூக பொறுப்புடன் விளக்கம் தராமல் இருப்பது சட்டத்தை மீறிய செயல் Surrogate Mother என்று சொல்லக்கூடிய வாடகைத்தாய் நியமித்ததில் இருந்து எந்த மருத்துவரின் ஆலோசனையில் இந்த செயற்கை முறை கருத்தரித்தல் நடந்தது என்பதனை கண்டறிந்து சட்ட விதி மீறலுக்கு தகுந்த நடவடிக்கை காவல் துறை எடுக்க வேண்டும்.

தவறான முன்னுதாரணமாகிவிடும்
மேலும் மிகவும் பிரபலமானவர்கள் என்பதால் அவ்வளவு எளிதில் சமூக சீர்கேட்டை சட்ட விதி மீறலை நாம் கடந்து போக முடியாது இளம் தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணமாக செயல்பட்டுள்ள திரு.விக்னேஷ் சிவன் திருமதி.நயன்தாரா மற்றும் சட்ட விதி மீறலுக்கு துணை நின்ற அனைவர் மீதும் காவல் துறை தகுந்த நடவடிக்க எடுக்க கோரி இன்று சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் கே.எல்.சார்லஸ் அலெக்ஸாண்டர் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











