ஹரியானாவிலிருந்து மும்பைக்கு 42 நாள் நடந்தே வந்த ரசிகர்... 'ரவுடி ரத்தோரை'ப் பார்க்க!

மும்பை: ஹிந்தி நடிகரான அக்‌ஷய்குமாரின் தீவிர ரசிகர் ஒருவர் அவரைப் பார்ப்பதற்காக ஹரியானாவிலிருந்து மும்பைக்கு கிட்டத்தட்ட 42 நாட்கள் பாதயாத்திரையாக சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார். இவரது ரசிகர் ஒருவர் இவரைப் பார்க்கும் ஆவலில் ஹரியானாவில் இருந்து மும்பைக்கு வர தீர்மானித்துள்ளார். ஆனால், கையில் பணமில்லை. எனவே, கால்நடையாகவே மும்பை வந்து சேர்ந்து விட்டார். ஆனால், அவர் மும்பை வந்து சேர்ந்த நேரம் அக்‌ஷய் இருந்ததோ வெளிநாட்டில்.

நானகைந்து நாட்கள் பொறுமையாக சாலையில் காத்திருந்து அக்‌ஷய்குமாரை சந்தித்து விட்டு மகிழ்ச்சியோடு ஊர் திரும்பியிருக்கிறார் இந்த ரசிகர்.

இன்ப அதிர்ச்சி....

இன்ப அதிர்ச்சி....

சற்று ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்றிருந்த நடிகர் அக்‌ஷய்குமார் கடந்த வாரம் மும்பை திரும்பினார். வீட்டிற்கு வந்த அவருக்கு அவரைச் சந்திப்பதற்காக ரசிகர் ஒருவர் கடந்த சில நாட்களாக சாலையில் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

ரசிகரின் பிடிவாதம்...

ரசிகரின் பிடிவாதம்...

அக்‌ஷய் ஊரில் இல்லை என்பதை எடுத்துக் கூறியும், நேரில் பார்த்து விட்டுத் தான் செல்வேன் என அந்த ரசிகர் பிடிவாதமாக இருப்பதாக வீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு பிரியமாக வந்துள்ள ரசிகரை ஏமாற்றக் கூடாது என எண்ணிய அக்‌ஷய் ரசிகரை அழைத்து நேரில் பேசியுள்ளார்.

மட்டற்ற மகிழ்ச்சி....

மட்டற்ற மகிழ்ச்சி....

அந்த ரசிகருக்கோ நடப்பது கனவா அல்லது நிஜமா என்பதே புரியவில்லையாம். அக்‌ஷயை நேரில் பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி அவருக்கு. அவரிடம் நேரில் பேசியதில் இருந்து அக்‌ஷய்க்கு பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளது.

தீவிர ரசிகர்...

தீவிர ரசிகர்...

அதாவது ஹரியானாவைச் சேர்ந்த அந்த இளைஞர் அக்‌ஷயின் தீவிர ரசிகராம். திடீரென ஒருநாள் அக்‌ஷயைச் சந்திக்க வேண்டும் எனத் தோன்றியதாம். ஆனால், கையில் காசில்லை என்பதால், தனது நடைப் பயணத்தை தொடங்கிவிட்டாராம்.

பசித்தால் வேலை...

பசித்தால் வேலை...

நாளொன்றுக்கு 42கிமீ என நடந்து வந்த அந்த ரசிகர் இரவுகளை சாலையில் கழித்துள்ளார். பசித்தால் அருகில் இருக்கும் ஏதாவது உணவகங்களில் வேலை செய்து சாப்பிட்டு பசியாற்றியுள்ளார்.

அந்த 42 நாட்கள்....

அந்த 42 நாட்கள்....

இப்படியாக கிட்டத்தட்ட 42 நாட்கள் ஹரியானாவிலிருந்து மும்பைக்கு நடந்தே வந்துள்ளார் அந்த ரசிகர். ஆனால், அக்‌ஷயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் காலே வலிக்கவில்லையாம் அவருக்கு.

புல்லரிப்பு....

புல்லரிப்பு....

ரசிகர் கூறியதைக் கேட்டு அக்‌ஷய்க்கு புல்லரித்து விட்டதாம். அந்த 21 வயது ரசிகர் தன் மீது வைத்துள்ள அன்பையும், அர்ப்பணிப்பையும் நினைத்து ஆச்சர்யப் பட்டாராம் அக்‌ஷய். ரசிகரின் விருப்பத்திற்கிணங்க அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.

கொஞ்சம் காசு...கொஞ்சம் அட்வைஸ்....

கொஞ்சம் காசு...கொஞ்சம் அட்வைஸ்....

அக்‌ஷயோடு அதிக நேரம் செலவிட விரும்பிய அந்த ரசிகரிடம் தனக்கு படப்பிடிப்புகள் இருப்பதாகக் கூறிய அக்‌ஷய், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த அந்த ரசிகருக்கு செலவுக்கு பணமும், கூடுதலாக அறிவுரையும் கூறி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தாராம் அக்‌ஷய்.

அன்பு வேண்டுகோள்....

அன்பு வேண்டுகோள்....

கூடவே, மீண்டும் இது போல், பெற்றோரை தேட வைத்து விட்டு நடந்து வராதே என அந்த ரசிகரிடம் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளாராம் அக்‌ஷய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X