Vishal - விஷால் மகளா இது?.. திடீரென மேடைக்கு வந்த பெண்.. யாருக்கும் தெரியாத விஷாலின் எமோஷனல் மறுபக்கம்
சென்னை: Vishal (விஷால்) விஷால் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எமோஷனலான நிகழ்வு ஒன்று நடந்தது.
நடிகர் விஷாலுக்கு சமீப காலமாக எந்த ஹிட் படமும் அமையவில்லை. இதனால் எப்படியாவது ஒரு ஹிட்டை கொடுத்து விட வேண்டும் என அவர் ஏங்கிக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான லத்தி படமும் அவருக்கு மோசமான தோல்வியையே கொடுத்தது. சூழல் இப்படி இருக்க மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார்.

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி: படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு 33ஆவது படமாகும். இப்படத்தில் செல்வராகவனும் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மூலமாவது விஷாலுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
ட்ரெய்லர்: இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. டைம் ட்ராவலை மையப்படுத்தி படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நடிகை சில்க் ஸ்மிதாவையும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் படத்தில் ஏதேனும் வித்தியாசம் இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் விஷாலின் ரசிகர்கள். படமானது செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது.
ட்ரெய்லர் வெளியீட்டு விழா: இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் விஷால் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். படக்குழுவினர் மட்டுமின்றி விஷால் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க வைத்த மாணவியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய விஷால், "எனக்கு ஒரு விண்ணப்பம் வந்தது. அதில் ஒரு மாணவி தனக்கு பி.ஏ.இங்கிலீஷ் படிக்க வேண்டும். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க வேண்டும் என கேட்டிருந்ஹ்டார்.
என் குழந்தை ஃபர்ஸ்ட் வரும்: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் முதல்வருக்கு ஃபோன் செய்தேன். அதுவரை அவர் எனக்கு அறிமுகம் கிடையாது. இருந்தாலும் நான் விஷயத்தை சொன்னேன். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு முடியாது என்று சொல்லிவ்ட்டார். அப்போது நான், மேடம் நீங்கள் ஒரு செமஸ்டர் மட்டும் பாருங்கள். எனது குழந்தை நல்ல மார்க் எடுத்து ஃபர்ஸ்ட் வருவா ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். சரி நாளைக்கு ஃபோன் பண்ணுங்க என்று சொல்லிவிட்டார்.
மறு நாள் ஃபோன்: மறுநாள் ஃபோன் செய்தேன். அப்போது அந்த முதல்வர், 'நீங்கள் சொன்னபடி ஒரு செமஸ்டர்தான் பார்ப்பேன். நல்ல மார்க் எடுக்கவில்லை என்றால் என்னை மன்னித்துவிடுங்கள் விஷால்' என்றார். கண்டிப்பாக வாங்குவா மேடம் என்று உறுதி கொடுத்தேன். அந்த மாணவி நான் சொன்னபடியே முதல் செமஸ்டரில் வகுப்பில் முதல் இடம் பிடித்துவிட்டார். அந்த மாணவி என்னுடைய மகள்தான். பிறகு ஒருநாள் மீண்டும் என்னை அழைத்த ஸ்டெல்லா மேரீஸ் முதல்வர் விஷால் அடுத்த வருடத்திலிருந்து உனக்கு இரண்டு சீட் தருகிறேன் என உறுதியளித்தார்" என்றார்.
விஷாலைத் தொடர்ந்து பேசிய அந்த மாணவி, "கன்னியாகுமரியை சேர்ந்த எனக்கு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க முடியுமா என்ற ஏக்கம் எனக்கு இருந்தது. அதை விஷால் அண்ணாதான் நிறைவேற்றி வைத்தார். அதுமட்டுமின்றி போர்ச்சுகலுக்கு ஒரு ட்ரிப் சென்றிருந்தேன். அதற்கும் இவர்தான் பணம் கொடுத்தார். மேலும் செலவுக்கும் பணம் கொடுத்தார். அங்கு சென்று சேர்ந்த பிறகும் எனக்கு ஃபோன் செய்து எல்லாம் ஓகேதானே என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் எனக்கு அப்பா மாதிரிதான்" என்றார் எமோஷனலாக.


Click it and Unblock the Notifications











