50 பேருக்கு மட்டுமே அழைப்பு.. நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று திருமணம்.. ஏற்பாடுகள் தீவிரம்!

By

சென்னை: நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கவுதம் கிட்சிலு திருமணம் இன்று நடக்கிறது.

நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மகிழ்ச்சி அறிவிப்பு

மகிழ்ச்சி அறிவிப்பு

இப்போது இந்தியன் 2, ஹேய் சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.

இன்று திருமணம்

இன்று திருமணம்

தொழிலதிபர், கவுதம் கிட்சிலுவுடன் தனது திருமணம் 30 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்படி இவர்கள் திருமணம் இன்று நடக்கிறது. திருமணத்துக்கு முன், தனது இன்ஸ்டாவில் திருமணத்துக்கு முன் நடக்கும் விழாக்களின் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

மெகந்தி விழா

மெகந்தி விழா

தனது சகோதரி நிஷா அகர்வாலுடனும் அவர் மகனுடனும் இருக்கும் புகைப்படங்களை போஸ்ட் பண்ணியிருந்த நடிகை காஜல் அகர்வால், பின்னர் மெகந்தி அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தார். அவர் வீட்டில் நடந்த மெகந்தி விழாவில் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

ரொமான்ஸ் போட்டோ

ரொமான்ஸ் போட்டோ

இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு தனது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டிருந்தார். அது வைரலானது. அதில் வருங்கால கணவர் கவுதம் கிட்சிலுவின் தோள் மீது கைபோட்டபடி சிரித்துக் கொண்டிருந்தார்.

கொலாபா ஓட்டல்

கொலாபா ஓட்டல்

இவர்கள் திருமணம் நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் அதிகமாகி வருவதால், அவர் வீட்டில் எளிமையாகத் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று மாலை கொலாபாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

50 பேருக்கு அழைப்பு

50 பேருக்கு அழைப்பு

மொத்தம் 50 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்னும் பின்னும் சில விழாக்கள் நடைபெற இருப்பதாக அவர்கள் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கவுதம் கிட்ச்லு, தனது வீட்டில் பூஜை ஒன்றை நடத்த இருப்பதாகவும் அவர்கள் கூறினார். நடிகை காஜல் திருமணத்தை அடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X