twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊமைவிழிகள் 33 : டிஆர்பி ரேட்டிங்கில் இப்பவும் நம்பர் 1- கம்பீர கேப்டனை மறக்க முடியுமா

    |

    சென்னை : இன்னிக்கு ஷார்ட் ஃபிலிம் எடுத்து தன்னை ப்ரூஃப் பண்ணிட்டு அதுக்கப்புறமா சினிமாவுல நுழைய காத்திக்கிட்டு இருக்குறவங்களுக்கு ஊமை விழிகள் படம் எடுத்து சாதிச்ச ஆபாவாணன் குழு நல்ல உதாரணம்னு சொல்லலாம்.

    சுமார் 33 வருஷங்களுக்கு முன்னால, சினிமா ஆசையில, நான் சினிமா காலேஜ்ல (சென்னை திரைப்படக் கல்லூரி) சேரப்போறேன்னு வீட்டுல சொன்னா, ஏன்டா டேய் ஒனக்கு கோட்டி கீட்டி பிடிச்சிடிச்சான்னு நக்கலா கேப்பாங்க. இதெல்லாமே ஊமை விழிகள் அப்பிடின்னு ஒரு படம் வர்ற வரைக்கும் தான் சார்.

    தமிழ் சினிமாவையே பொரட்டிப் போட்ட படம் தான் சார் அந்த ஊமை விழிகள். சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட் பசங்களால என்ன பண்ண முடியும்னு கேட்டவங்களுக்கு, எங்களாலயும் உலகத் தரத்துல ஒரு படம் பண்ண முடியும்னு ப்ரூஃப் பண்ணின படந்தான் சார் ஊமை விழிகள்.

    சினிமா கனவுகள்

    சினிமா கனவுகள்

    எத்தனையோ பேருக்கு தன்னோட வாழ்க்கையோட லட்சியமே செல்லுலாய்டு கனவுகள் தான். அந்தக் கனவு என்னிக்காவது ஒரு நாள் நிச்சயமா நிறைவேறும்னு நினைக்கிறது தான். 33 வருஷத்துக்கு முன்னாடி இதே ஆகஸ்டு 15ஆம் தேதியன்னிக்கு தான் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியுட் மாணவர்கள் சில பேர் சேர்ந்து உருவாக்குன பெரிய படத்தை அதுவும் 70 எம்எம்(70MM) உருவாக்கி இந்திய சினிமாவையே திரும்பி பாக்க வச்சாங்க.

    திரைப்படக்கல்லூரி மாணவர்கள்

    திரைப்படக்கல்லூரி மாணவர்கள்

    ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் படிச்ச ஆபாவாணன், அரவிந்தராஜ், ரமேஷ் இவங்க கூட இன்னும் சில பேர் சேந்து எடுத்த படம் தான் ஊமை விழிகள். அரவிந்தராஜ் தான் படத்தை டைரக்ட் பண்ணினது. ஆபாவாணன் இந்தப் படத்தை எடுக்குறதுக்கு பக்க பலமா இருந்தாரு. ரமேஷ் தான் கேமரா மேனா ஒர்க் பண்ணினாரு.

    சஸ்பென்ஸ் திரில்லர்

    சஸ்பென்ஸ் திரில்லர்

    கதை ரொம்ப சிம்ப்பிள் தான் சார். சோழா அப்பிடின்னு ஒரு பிக்னிக் வில்லேஜ். அங்க இருக்குற ஒரு வயதான மூதாட்டி, அப்புறம் ஒரு குதிரை வண்டிக்காரன். அந்த பிக்னிக் வில்லேஜுக்கு வர்ற பொண்ணுங்க காணாம போறாங்க. இதை வச்சிக்கிட்டு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை உருவாக்க முடியும்னு ப்ரூஃப் பண்ணினாங்க சார் இந்த கெட்ட பசங்க.

    கூட்டு முயற்சி

    கூட்டு முயற்சி

    அன்னிக்கு இவங்க எடுத்த ஒட்டுமொத்த கூட்டு முயற்சி தான் சார், இன்னிக்கு பல காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் அப்பிடிங்குற ஒரு டிகிரியே படிப்பையே கொண்டு வந்தாங்க. ஃபோட்டோகிராஃபி, எடிட்டிங் அப்பிடின்னு எத்தனையோ டிபார்ட்மெண்டுகள் இன்னிக்கு உண்டாகி இருக்கு.
    இந்தப் படத்துல விஜயகாந்த், சரிதா, நவரச நாயகன் கார்த்திக், சசிகலா, அருண்பாண்டியன், விசு, சந்திர சேகர், இளவரசி, ரவிச்சந்திரன், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், செந்தில், ஸ்ரீவித்யா, மலேசியா வாசதேவன், இன்னும் பல பேர் நடிச்சி கொடுத்தாங்க.

    கேப்டன் விஜயகாந்த்

    கேப்டன் விஜயகாந்த்

    இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, அந்த பீரியட்ல விஜயகாந்த் கால்ஷீட் கெடைக்கிறதே கஷ்டம். அப்பிடி இருந்தும் கூட, ஃபிலிம் இண்ஸ்ட்டியூட் பசங்க, வளர்ற பசங்கங்குறதுனாலயே, ஒரு பைசா கூட சம்பளம் வாங்காம ஃப்ரீயா நடிச்சிக் கொடுத்தாரு.

    திரைப்படக்கல்லூரி மாணவர்களின் படம்

    திரைப்படக்கல்லூரி மாணவர்களின் படம்

    இன்னும் சொல்லப்போனா, இந்தப் படத்துல அவர் நடிக்குறப்போ தமிழ் சினிமாவுல அவர் நம்பர் 1 இடத்துல இருந்த காலகட்டம். அப்படி இருந்தும் கூட ஃபிலிம் இண்ஸ்ட்டியூட் பசங்களை என்கரேஜ் பண்ணினாரு. இந்தப் படத்துக்க அப்புறமும் கூட ஃபிலிம் இண்ஸ்டிடியூட் பசங்க எடுத்த உழவன் மகன், செந்தூரப்பூவே என தொடர்ந்து அவங்க எடுத்த படத்துல நடிச்சி கொடுத்து அவங்கள கை தூக்கி விட்டாரு. இன்னிக்கோட ஊமைவிழிகள் படம் வெளியாகி 33 வருஷம் ஆனாலும் கூட, அந்தப் படத்த டிவில போட்டா டி,ஆர்,பி ரேட்டிங்ல மொத இடத்துக்க வருதுங்கிறது ஆச்சரியந்தாங்க.

    English summary
    A good example for today's short film directors, here is a picture of Oomai vizhigal film 33 years ago,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X