தாதாசாகேப் பால்கே விருது விழா... மகாமுனி படத்திற்கு கிடைத்த கௌரவம்

சென்னை : ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 2019ல் வெளிவந்த படம் மகாமுனி.

சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ஆர்யாவிற்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்தது.

2019 ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மகாமுனி படத்திற்கு சிறப்பு கௌரவம் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்திற்கு விருது

ரஜினிகாந்திற்கு விருது

2019 ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் 51வது நடிகர் அவர். மேலும் ஒவ்வொரு பிரிவுகளிலும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மகாமுனி படத்திற்கு சிறப்பு கௌரவம்

மகாமுனி படத்திற்கு சிறப்பு கௌரவம்

மோகன்லால், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட 5 பேர்களை கொண்ட ஜூரி உறுப்பினர்கள் நடிகர் ரஜினிகாந்த்தை ஒருமனதாக இந்த விருதுக்கான தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2019ல் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி படத்திற்கு சிறப்பான கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூரி மென்ஷன் திரைப்படம்

ஜூரி மென்ஷன் திரைப்படம்

கடந்த 2019ல் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த மகாமுனி படம் அவருக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்தது. தமன் இசையில் ஸ்டூடியோ க்ரீன் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்நிலையில் 11வது தாதா சாகேப் பால்கே விருதில் மகாமுனி படம் சிறப்பான ஜூரி மென்ஷன் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

டைரக்டருக்கு பாராட்டு

டைரக்டருக்கு பாராட்டு

இந்தத் தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் வெளியிட்டுள்ள நடிகர் ஆர்யா. படக்குழுவினருக்கும் முக்கியமான இயக்குநர் சாந்தகுமாருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பெருமையை பெற சாந்தகுமார் தகுதியானவர் என்றும் அவர் தனியாக குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Read more about: honour கௌரவம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X