Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் பட க்ளைமேக்ஸ் இதுவா?.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் க்ளைமேக்ஸ் குறித்த தகவல் வெளியாகி சிவா ரசிகர்களை சோகம் அடைய செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் இணைந்துவிட்டார். மேலும் சிவகார்த்திகேயனை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம் என்ற நம்பிக்கையும் கோலிவுட் தயாரிப்பாளர்களிடம் உருவாகியது.

 An information About Sivakarthikeyan Next Movie Climax

பொய்த்துப்போன நம்பிக்கை: ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப்போகும் விதமாக பிரின்ஸ் படத்தின் ரிசல்ட் அமைந்தது. தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வளர்க்கும் நோக்கத்தில் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. சொல்லப்போனால் அவரது கரியரில் மோசமான தோல்வி படங்களின் வரிசையில் இணைந்தது. மேலும் ரிலீஸான ஒரே வாரத்தில் படமும் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது.

மாவீரன்: இப்படிப்பட்ட சூழலில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சி.கா. பிரின்ஸ் கொடுத்த மோசமான அனுபவத்தை மாவீரன் மூலம் மறக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரும் அவரது ரசிகர்களும் இருக்கின்றனர். படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு சிங்கிள் வெளியாகியிருக்கின்றது. கடைசியாக வெளியான வண்ணாரப்பேட்டையில பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கமல் தயாரிப்பில்: மாவீரன் படத்தில் நடித்து முடித்த பிறகு கமல் ஹாசனின் தயாரிப்பில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவா.ரங்கூன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பூஜை சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மேலும் காஷ்மீரில் முக்கால்வாசி படத்தை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

ஏன் காஷ்மீர்?: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே காஷ்மீரில் ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அண்மையில் ஷூட்டிங்கிற்காக படக்குழு அங்கு செல்லவும் செய்தது. ஆனால் ஏதோ சிக்கலால் மீண்டும் தமிழ்நாடு திரும்பிவிட்டது. தமிழ்நாடு திரும்பியதோடு மட்டுமல்லாமல் சென்னையில் இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்ததாகவும் புதிய பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

க்ளைமேக்ஸ் இதுவா?: இந்நிலையில் படத்தின் க்ளைமேக்ஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்தப் படம் பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒரு இந்திய ராணுவ வீரரின் பயோபிக்காம். அந்த ராணுவ வீரராகத்தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம். எனவே அந்த ராணுவ வீரர் உண்மையிலேயே இறந்துவிட்டதால் படத்திலும் சிவகார்த்திகேயன் இறந்துபோவது போல் க்ளைமேக்ஸை அமைக்க இயக்குநர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக பெரிய ஹீரோக்கள் படத்தில் அவர் இறப்பது போன்ற க்ளைமேக்ஸை வைக்க யோசிப்பதுண்டு.

ஆனால் இந்தப் படத்துக்கு அந்த மாதிரி க்ளைமேக்ஸ் வைத்தால்தான் ரசிகர்களின் மனதில் படம் தங்கும் என எண்ணப்படுவதால்தான் இந்த முடிவை இயக்குநர் துணிந்து எடுத்திருக்கிறாராம். இத்தகவலை கேள்விப்பட்ட சிவா ரசிகர்கள் என்னது க்ளைமேக்ஸில் சிவகார்த்திகேயன் இறந்துவிடுவாரா என இப்போதே சோக ஸ்மைலியை பறக்க விட்டுக்கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இந்த க்ளைமேக்ஸ்தான் படத்தில் வரும் என்பதற்கு வாய்ப்பு குறைவு என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X