Vijay - ரஜினிகாந்த்தின் அன்புக்கு நான் அடிமை.. தளபதி விஜய் சொன்ன செம சீக்ரெட் உள்ளே

சென்னை: Vijay (விஜய்) ரஜினிகாந்த் குறித்து நடிகர் விஜய் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நடிகர் விஜய் கோலிவுட்டில் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர். அவரது படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலித்துவருகின்றன. வாரிசு, பீஸ்ட், லியோ ஆகிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கிறதாக கூறப்படுகிறது.

An interview given by actor Vijay about Rajinikanth is trending on the Social Media

ரஜினி Vs விஜய்: சமீபகாலமாக ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும்தான் மோதல் உச்சத்தில் இருக்கிறது. ரஜினிக்கு தர்பார், அண்ணாத்த படங்கள் தோல்வியை சந்தித்து வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்ததால் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் முஷ்டி முறுக்கினர். ஆனால் ரஜினி ரசிகர்களோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

முற்றுப்புள்ளி வைத்த விஜய்: இந்தப் பஞ்சாயத்து குறித்து ரஜினிகாந்த் கூறிய குட்டி கதை புதிய பஞ்சாயத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் என கூறி இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும் சூப்பர் ஸ்டார் பட்டம் மீது தான் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அப்பா - மகன் குட்டி கதையை சொல்லி மறைமுகமாக உணர்த்தினார் விஜய்.

விஜய்யின் பேட்டி: விஜய் சினிமாவுக்குள் வருவதற்கு தன்னுடைய அப்பாவிடம் நடித்து காண்பித்ததே அண்ணாமலை பட சீன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு விஜய் ரஜினியின் வெறித்தனமான ரசிகர். இந்நிலையில் அவர் ரஜினி குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் தீயாக பரவிவருகிறது. அவர் அளித்த பேட்டியில், "நான் சின்ன வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன், வாரத்துல நாலு நாள் ஸ்கூலுக்கு போனேன் என்றால் மூனு நாள் ரஜினியின் படம் பார்த்துட்டு இருப்பேன்.

5 வயது: அப்போது எனக்கு 5 வயது. ரஜினியின் அன்புக்கு நான் அடிமை படம் ரிலீஸானது. எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் பள்ளியை கட் அடித்துவிட்டு செல்லும் வயது இல்லை. அதனால் அப்பா ஷூட்டிங் போனதும் அம்மாவிடம் ரொம்ப அடம் பிடிச்சு மேட்னி ஷோவுக்கு போனேன். அந்த ஷோவை பார்த்து முடிச்சிட்டு வெளியே வந்ததும் அம்மாட்டா இன்னொரு தடவை பார்க்கணும்னு அடம் பிடித்தேன். ஆனால் என்னை அம்மா ஒரு போடு போட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க.

நினைத்ததை முடித்த விஜய்: அங்கிருந்து நேரா சுரேந்தர் மாமா வீட்டுக்கு போனேன். அவருக்கு நான் எப்போதுமே செல்ல பிள்ளை. என்னடா திடீர்னு வந்துருக்கனு கேட்டாரு. அன்புக்கு நான் அடிமை படம் பார்க்கணும்னு சொன்னேன். சரி வா அம்மாட்ட சொல்லிட்டு போகலாம்னு சொன்னாரு. இல்லை மாமா அம்மாக்கிட்ட சொன்னா திட்டுவாங்க. நான் உங்க வீட்ல இருக்கேனு சொல்லிட்டுதான் வந்திருக்கேன்.

படம் பார்த்துட்டு நைட் வீட்டுக்கு போறேனு சொன்னேன். அதே மாதிரி சுரேந்தர் மாமாவுடன் மீண்டும் போயி இரண்டாவது தடவையா அந்தப் படம் பார்த்தேன். பிறகு ஒருமுறை அப்பாவுடனும் சென்ற அந்தப் படத்தை பார்த்தேன்" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு எவ்வளவு பெரிய ரசிகரா விஜய் இருந்திருக்கிறார் என்று ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X