நாயகனுக்கு பிறகு இணையும் மாஸ் கூட்டணி… மணிரத்னம் இயக்கத்தில் கமல் 234… அட அசத்தல் அப்டேட்டா இருக்கே
சென்னை: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து கமல் நடிக்கவுள்ள அவரது 234வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினியின் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கமலுடன் கூட்டணி வைத்துள்ளது எதிர்பர்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கமல் 68வது பிறந்தநாள்
விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ள கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹ்சாசன் நாளை (நவ 7) 68வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை கமல் அறிவித்துள்ளார். இது ரசிகர்களே எதிர்பார்க்காத தரமான அப்டேட்டாக அமைந்துள்ளது.

நாயகன் கூட்டணி
1987ல் வெளியான நாயகன் திரைப்படம் இந்திய சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. கமலின் 234வது படமான இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் ஷுட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், 2024ல் படம் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினி படம் இல்லையா?
கமல் - மணிரத்னம் கூட்டணியில் முதன்முறையாக ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளார். நாயகன் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், தற்போது உருவாகவுள்ள 'கமல் 234' படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஆகமொத்தம் பிரம்மாண்டமான கூட்டணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. முன்னதாக லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இப்போது அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக கமல் படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம்.

நாயகன் இரண்டாம் பகமா?
கமல் - மணிரத்னம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது நாயகன் பட வேலு நாயக்கர் தான். 35 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்துள்ளதால், இது நாயகன் இரண்டாம் பாகமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அதுகுறித்து இப்போதைக்கு எந்த அறிவிப்பும் வெளியாக்வில்லை. இந்நிலையில், கமலின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் அவரது அடுத்த படம் உருவாகிறது என்ற அறிவிப்பு, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











