Vijay Antony's daughter: அம்மாவை விட்டு போக எப்படி மனசு வந்துச்சு.. கதறும் நெட்டிசன்ஸ்!
சென்னை: விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவின் பதிவினைப்பார்த்து ரசிகர்கள் கதறி அழுது வருகின்றனர்.
பிரபலமான இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
இந்த சம்பவம் திரையுலகத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

விஜய் ஆண்டனி மகள்: சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை 3 மணி அளவில்,தனது ரூமில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து பதறிப்போன விஜய் ஆண்டனி. வீட்டு பணியாளர்களின் உதவியுடன் அவரை அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்தார்.
இறுதிச்சடங்கு: மீராவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து,மீராவின் உடல் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்தூறு ஆய்வுகள் முடிந்து தற்போது உடல் டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனி இல்லத்தில் இறுதி சடங்குக்கான ஏற்பாடு நடத்தப்பட்டு வருகிறது.
மனச்சோர்வுடன் காணப்பட்ட மீரா: கடந்த ஆறு மாதங்களாகவே மீரா மனசோர்வுடன் காணப்பட்டதாகவும் மனஅழுத்ததில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மீராவிற்கு சிகிச்சை அளித்த காவேரி மருத்துவமனை மருத்துவரிடம் அவர் எதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு எந்த வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.
என் தங்ககட்டி: விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தனது மகளை நினைத்து பெருமிதத்துடன் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், என வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி நீ, ஏன் கண்ணீருக்கு ஆறுதலாய் இருந்தவள் நீ, உன்னுடைய அதிகமான குறும்புத்தனத்தால் என் மன அழுத்தத்திற்கு காரணமான என் தங்ககட்டி, செல்லக்குட்டி என விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா பதிவிட்டுள்ளார்.
மனசு வந்துச்சு: இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், இதைப்பார்த்த ரசிகர்கள் அம்மாவை இப்படி விட்டுப்போக எப்படிமா மனசு வந்துச்சு என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மருத்துவமனைக்கு யாராரும் வரவேண்டாம் என்று விஜய் ஆண்டனி தரப்பில் தெரிவித்ததை அடுத்து, திரைப்பிரபலங்கள் பலர் அவரது வீட்டுக்கு வந்து அஞ்சல் செலுத்திவிட்டு ஆறுதல் கூறிவருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











