GV Prakash and Saindhavi Divorce: சைந்தவி கொடுத்த முதல் காதல் பரிசு..புலம்பும் ரசிகர்கள்!
சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்துள்ளனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது உண்மையாக இருக்கக்கூடாது என்று ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
பள்ளிப்பருவத்தில் இருந்தே ஜிவி பிரகாஷும், சைந்தவியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு, அன்வி எனும் 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜி.வி.பிரகாஷின் இசையில் சைந்தவி பல பாடல்களை பாடி உள்ளார். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் இடம் பெற்ற எள்ளு வய பூக்கலையே பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங்கானது.

ஜிவி பிரகாஷ், சைந்தவி: கடந்த சில நாள்களாக ஜிவி பிரகாஷும் சைந்தவியும் பிரிந்த வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் தகவல் இணையத்தில் பரவி வந்த நிலையில், தற்போது இதை உறுதிப்படுத்தும் வகையில், ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், சைந்தவியும் நானும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பின், நீண்ட யோசனைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
கடினமான நேரத்தில்: இந்தத் தருணத்தில், எங்கள் தனி மனித சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் இருவருக்கும் இதுதான் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவு எங்களுக்கு உதவியாக இருக்கும் எனப் பகிர்ந்துள்ளனர்.
பழைய பேட்டி: இவர்களின் இந்த முடிவால் கவலை அடைந்த ரசிகர்கள், இவர்களின் பழைய பேட்டி வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், எனக்கும் சைந்தவிக்கும் எப்படி காதல் வந்தது என்று தெரியாது, அவள் ஒரு நல்ல தோழி, மற்றவர்களை விட அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் பத்தாவது படிக்கும் போதில் இருந்தே இருவரும் பழகி வருகிறோம். அவளுடன் இருக்கும் போது கன்பர்டபுளா இருக்கும், எங்களுக்குள் இருக்கும் காதல் இதனால் தான் வந்தது, அதனால் தான் வந்தது என்று எதையும் சொல்லத் தேவையில்லை. எங்கள் காதல் அழகானது என்று கூறியுள்ளனர்.
முதல் காதல் பரிசு: அதே போல, சைந்தவி எனக்கு பல கிப்ட்களை கொடுத்து இருக்காங்க, ஆனால், காதலை சொன்ன பிறகு, முதன் முதலா காதலர் தினத்திற்கு ராம்சீதா திருமண ஓவியத்தை பரிசாக கொடுத்து, அதை ஸ்டூடியோவில் வைத்துவிட்டு இது இங்கேதான் இருக்கணும்னு சொன்னாங்க, அது இப்போதும் ஸ்டூடியோவில் தான் இருக்கு என்று இருவரும் அந்த பேட்டியில் தங்களது காதல் குறித்து அழகாக பேசினார்கள். இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள், 11 வருட திருமண வாழ்க்கை இப்படி கசந்துவிட்டதே என்றும், இந்த செய்தி உண்மையாக இருக்க வேண்டாம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











