கிளைமாக்ஸில் செம ட்விஸ்ட்.. லியோ 2 இருக்கா? லோகேஷ் கனகராஜ் சொல்வது என்ன!
சென்னை: லியோ திரைப்படம் 19ந் தேதி வெளியாக உள்ள நிலையில், லியோ 2 குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸை நெருங்கி வர பாடல்கள், டிரைலர் என படம் குறித்து வீடியோக்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் எப்போதோ படத்தின் புக்கிங் தொடங்கப்பட்டு விட்டநிலையில், நேற்று ஒரே நாளில் மட்டுமே Book My Showவில் இந்தியாவில் 1.2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளது.

விஜய் அண்ணா: இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்தில் நடக்கும் போது அவரை சார் சார் என்று தான் அழைத்து வந்தேன். ஆனால், படம் முடிவதற்குள் நான் மட்டுமில்லாமல் செட்டில் இருக்கும் அனைவருமே அவரை அண்ணா என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டோம். அதன் பிறகு மாஸ்டர் படம் முடிந்த பிறகும், அவர் தொடர்ந்து என்னிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டு தான் இருந்தார்.
ரசிகர்களுக்கு பிடிக்கும்: மாஸ்டர் படத்தில் ஜாலியாக இருந்த விஜய், லியோ படத்தின் போது ரொம்ப சீரியசாக இருந்தார். ஏன் என்றால் அந்த கதாபாத்திரத்திற்காக செட்டிலும் அப்படியே இருந்தார். அதேபோல லியோ படம் காமன் மேனுக்கான படம் தான், ஆனாலும், விஜய் ரசிகர்களுக்காக சில விஷயங்களை படத்தில் சேர்த்து இருக்கிறேன். படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
லியோ 2 இருக்கா: மேலும்,முதல் முதலில் இந்த கனேக்ஷ்ன் விஷயத்தை கமலிடம் கூறேன். நல்லா இருக்கே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். ஆனால்,LCU என்று ஒரு ரசிகர் பெயர் வைத்திருந்தார். அதை நான் அப்படியே பயன்படுத்திக்கொண்டேன். ஆனால், சம்பந்தமே இல்லாத இடத்தில் LCU என்று பெயர்வைத்தால் நன்றாக இருக்காது.அதைப் பார்த்து பயன்படுத்த வேண்டும். அதே போல ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு என்று தனிகதை ஒன்று இருக்கு, அதே போல விக்ரம் 2, லியோ 2 வரும் அதற்கான லீட் கிளைமாக்ஸில் இருக்கு என்றார்.

ரஜினிக்கு கதை பிடித்துவிட்டது: மேலும், ரஜினியை வைத்து படம் இயக்குவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை, லியோ படத்தின் ஷூட்டிங்கின் போது, அனிருத்தை பார்க்க போய் இருந்தேன் அப்போது தான் அவர், நீ ஒரு கதை வெச்சி இருக்கியே அது ரஜினி சாருக்கு செட் ஆகும் என்றார். உடனே அடுத்த நாள் ரஜினியை சந்தித்து கதையை சொன்னேன் அவருக்கு கதை பிடித்து விட்டதால், ஒகே சொல்லிவிட்டார் என்றார்.


Click it and Unblock the Notifications











