இவங்களுக்கு இடையில் சிக்கிக்கிட்டேனே.. தனுஷ் - ஐஸ்வர்யா இடையில் மாட்டிக்கொண்ட இளம் நடிகர்.. போச்சே!

சென்னை: நடிகர் தனுஷுக்கும் - ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் இடையில் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் வேறு ஒரு விஷயத்தில் இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதன் இவர்களின் 18 வருட திருமணம் முடிவிற்கு வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் இது தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட்டார். இதை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் தனது விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இன்னும் சட்ட ரீதியாக இவர்கள் விவாகரத்து பெறவில்லை என்றாலும் பிரிந்து வாழ முடிவு செய்து வாழ்ந்து வருகின்றனர்.

பிரிந்து வாழ்கின்றனர்

பிரிந்து வாழ்கின்றனர்

இவர்கள் இருவருக்கும் 15, 11 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷ் வரிசையாக சில இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். இதனால் அவர் வீட்டிற்கு வருவது ஒரு பக்கம் குறைந்துள்ளது. அதேபோல் சில இந்தி படங்களில் தனுஷ் சைன் செய்வதற்கு முன் அதை பற்றி தனது குடும்பத்தில் யாரிடமும் தனுஷ் பேசவில்லை என்று கூறப்படுகிறது. முன்பெல்லாம் தமிழ் படங்களில் நடிக்கும் முன் தனுஷ் அதை பற்றி தனது மனைவியிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்தி படங்களில் நடிப்பதை பற்றி அவர் தனது மனைவியிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இதனால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கிறதாம். இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது பெரிய சண்டையாக வெடிக்கவில்லை இல்லை என்று கூறப்படுகிறது. தனுஷ் பற்றி சென்ற சில கிசுகிசுக்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். தனுஷின் சினிமா தொடர்புகள் பற்றி ஐஸ்வர்யாவிடம் சிலர் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகசில நடிகைகளிடமும் ஐஸ்வர்யா கேள்வி எழுப்பி இருக்கிறாராம். இந்த நிலையில் ஐஸ்வர்யா இப்படி கேள்வி கேட்டது தொடர்பாக ஒரு நடிகை தனுஷிடமே நேரடியாக சென்று புகார் கொடுத்துள்ளார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சினிமா

சினிமா

இந்த நிலையில்தான் தற்போது பிரிந்து வாழும் தனுஷ் - ஐஸ்வர்யா தனுஷ் இடையே இளம் நடிகர் ஒருவர் மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது தொடங்கி உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இதே விஷ்ணு விஷாலை வைத்து தனுஷ் படம் எடுப்பதாக இருந்தது.

தனுஷ்

தனுஷ்

பெயரிடப்படாத படத்திற்கான ப்ரீ ப்ரொடெக்ஷன் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அந்த படத்திற்கு கால் சீட் கொடுக்கும்படி தனுஷ் கேட்டுள்ளார். ஐஸ்வர்யா கேட்ட அதே தேதிகளை விஷ்ணு விஷாலிடம் தனுஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரால் தேதிகளை கொடுக்க முடியவில்லை. இந்த மோதலில் இரண்டு பேருக்கும் இடையில் சிக்கி விஷ்ணு விஷால் சிரமப்பட்டு உள்ளார். கடைசியில் விஷ்ணு விஷால் தேதி கொடுக்கவில்லை என்று அவரை படத்தில் இருந்தே தூக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X