பிரம்மாண்ட அனகோண்டாவை பார்க்க ரெடியா மக்களே.. இந்த கிறிஸ்துமஸ் சும்மா அலறவிடப்போகுது!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் 'அனகோண்டா' படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சர்வதேச ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 'அனகோண்டா (2025)' திரைப்படம் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்த படம் அனகோண்டா வரிசை படங்களில் 6வது பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

1997ம் ஆண்டு வெளியான 'அனகோண்டா'வின் 'மெட்டா-ரீபூட்' ஆன இதை டாம் கோர்மிகன் இயக்குகிறார். பால் ரட், ஜாக் பிளாக் முக்கியப் பாத்திரங்களில் நடிக்க, ஸ்டீவ் ஜான், தந்தீவே நியூட்டன், டேனிலா மெல்சியர், செல்டன் மெல்லோ உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Anaconda 2025 locks its release date for this Christmas Celebration All details are here
Photo Credit:

இப்படத்தில், டக் (ஜாக் பிளாக்), கிரிஃப் (பால் ரட்) ஆகியோர் 1997 படத்தின் குறைந்த பட்ஜெட் ரீமேக்கை அமேசானில் படமாக்கச் செல்கின்றனர். அங்கு உண்மையான ராட்சத அனகோண்டா தோன்ற, திட்டம் சிதறி, படப்பிடிப்புத் தளம் உயிர் பிழைக்கும் போராட்டமாகிறது.

லூயிஸ் லோசா இயக்கிய 1997-ன் 'அனகோண்டா', திகில் சாகசப் படமாக வெளியாகி, கல்ட் கிளாசிக் அந்தஸ்து பெற்றது. இது தொடரின் முதல் பாகம்; 'அனகோண்டா (2025)' உட்பட மொத்தம் ஆறு திரைப்படங்கள் இந்த சீரிஸில் உருவாகியுள்ளன.

முந்தைய பாகங்கள்: 2004-ன் 'அனகோண்டாஸ்: தி ஹன்ட் ஃபார் தி பிளட் ஆர்கிட்', 2008-ன் 'அனகோண்டா 3: ஆஃப்ஸ்ப்ரிங்', 2009-ன் 'அனகோண்டாஸ்: டிரெயில் ஆஃப் பிளட்', 2015-ன் 'லேக் பிளாசிட் vs அனகோண்டா' ஆகும்.

மனிதனைத் தின்னும் ராட்சத அனகோண்டாக்கள், உயிர் பிழைப்பு, உயிரின அழிவு போன்ற மையக் கருத்துக்களால், இந்த வரிசை படங்கள் உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை ஈர்த்துள்ளது.

டிசம்பர் 25 அன்று திரைக்கு வரும் 'அனகோண்டா (2025)' மூலம், இந்த கொடிய உயிரினங்களின் மற்றொரு பரபரப்பான கதையைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உலகம் முழுவதும் அனகோண்டா ரசிகர்களுக்காக இந்த கிறிஸ்துமஸ்க்கு செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X