கொஞ்சம் உற்றுப் பார்த்தா, அந்த ஹீரோயின் சாயல் தெரியுதே.. பிரபல நடிகையை அவருடன் ஒப்பிடும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா 2 படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் அனைகா சோதி.

புனித் சிங், சர்வானந்த் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் தெலுங்கிலும் வெளியானது.

காவிய தலைவன்

காவிய தலைவன்

தமிழில், நான்தான்டா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. மும்பையில் நடக்கும் நிழல் உலக தாதா கதையான இந்தப் படம் கவனிக்கப்பட்டது. இந்தப் படத்தை அடுத்து, தமிழில் நேரடியாக அறிமுகமானார் அனைகா. வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நடித்த காவிய தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அனைகா.

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

ஜமீன் வீட்டுப் பெண்ணாக, சித்தார்த் ஜோடியாக அந்தப் படத்தில் நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து ராம்கோபால் வர்மா இயக்கத்தில் மீண்டும் நடித்தார். 365 டேஸ் என்ற அந்த தெலுங்கு படத்தில் புதிதாக திருமணமான பெண்ணாக நடித்திருந்தார். நந்து, கிருஷ்ணடு உட்பட பலர் நடித்த இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

ஜீவாவின் கீ

ஜீவாவின் கீ

இதையடுத்து, செம போதை ஆகாதே என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். பத்ரி வெங்கடேஷ் இயக்கிய இந்தப் படத்தில் அதர்வா ஹீரோ. இந்தப் படத்துக்குப் பிறகு ஜீவாவின் கீ படத்தில் நடித்திருந்தார். இதற்குப் பின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில படங்களில் பேசி வருவதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

லாக்டவுன்

லாக்டவுன்

தற்போது மும்பையில் இருக்கும் அனைகா, லாக்டவுன் காரணமாக சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கிளாமராக இருக்கின்றன. இதற்கும் ரசிகர்கள் அதிகமானோர் லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளனர்.

சிறந்த கேடயம்

சிறந்த கேடயம்

அதற்கு 'கொடூரமான உலகத்துக்கு சந்தோஷம் கொண்ட ஆன்மாவே சிறந்த கேடயம்' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். பலர் தங்கள் கமென்ட்களையும் பதிவிட்டுள்ளனர். ஏன் இப்படியொரு கேப்ஷன் என்று சிலர் கேட்டுள்ளனர். 'ரொம்ப ரொமான்டிக்காக இருக்கீங்க என்று சிலரும், உங்க பார்வையில என்னமோ இருக்குதே என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.

நேகா சர்மா சாயல்

நேகா சர்மா சாயல்

உங்க டிரெஸ்சிங் ஸ்டைல், ரொம்ப அழகு, உங்க நடிப்பு அவ்வளவு சிறப்பு என்று ஒருவர் கூறியுள்ளார். வோக் இந்தியா பத்திரிகையில் அட்டை படத்துல வரவேண்டிய ஹீரோயின் என்று ஒருவரும் உங்ககிட்ட இந்தி நடிகை நேகா சர்மா சாயல் இருக்குதே என்று ஒருவரும் கூறியுள்ளனர். 'உங்களை அதிகமான படங்கள்ல பார்க்க முடியலையே ஏன்?' என்று ஒருவர் கேட்டுள்ளார்.

சோகம் தெரியுதே

சோகம் தெரியுதே

'நீங்கள் சிறகில்லாத தேவதை என வர்ணித்துள்ள சிலர், உங்க வாட்ஸ் அப் நம்பர் தர முடியுமா? என்று கேட்டுள்ளனர். சிலர், முகத்துல அவ்வளவு சோகம் தெரியுதே, ஏன்? என்று சிலர் அக்கறையாக கேட்டுள்ளனர். சிலர் 'நீங்க எங்க பேவரைட் ஹீரோயின், உங்க புன்னகைதான் எங்களுக்கு வேணும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X