»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

வீட்டு வேலைக்கார சிறுமி விவகாரத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தெரிவிக்க வேண்டும் என்று நடிகைஅனாமிகாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை அனாமிகா வீட்டில் வேலை பார்த்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புஷ்பலதா என்ற சிறுமி திடீரெனகாணாமல் போனார். இவளை போலீஸார் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில் நடிகை அனாமிகா மீது பலபரபரப்பான புகார்களை கூறினாள்.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் தனது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று புஷ்பலதாவின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து சிறுமி புஷ்பலதாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படிநீதிபதிகள் முன்பு சிறுமி ஆஜர்படுத்தப்பட்டார். அவளிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது வழக்கறிஞர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் தவிர வேறு யாரும்அனுமதிக்கப்படவில்லை.

இந்த விசாரணைக்குப் பிறகு, வீட்டில் நடந்த உண்மை நிலவரம் குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி நடிகைஅனாமிகாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த மனு மீண்டும் 8-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

அனாமிகா வீட்டில் கசமுசா சம்பவங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Read more about: anamika, chennai
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil