»   »  அனாமிகா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை நடிகை அனாமிகா மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று கூறி அவரது வீட்டில்முன்பு வேலை பார்த்த சிறுமி புஷ்பலதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.நடிகை அனாமிகாவின் வீட்டில் புஷ்பலதா என்ற சிறுமி முன்பு வேலை பார்த்து வந்தாள். ஆந்திர மாநிலம்சித்தூரைச் சேர்ந்த இந்த சிறுமியை, அனாமிகா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் புஷ்பலதா வீட்டைவிட்டு வெளியேறினாள். இதையடுத்து அவளை போலீஸார் மீட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் புஷ்பலதா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.இந் நிலையில், புஷ்பலதாவின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,கடந்த 17.3.2005 அன்று எனது மகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டாள். அனாமிகாவும், அவரது சகோதரர் நாகராஜனும், எனது மகளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தினார்கள்.இதனால் பல முறை எனது மகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.இதுமட்டுமல்லாமல் எனது மகளின் காலில் இன்னும் தீக்காயம் உள்ளது. இதுதவிர பல முறை எங்களையும்அனாமிகா மிரட்டியுள்ளார். எங்களைத் தாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 23.5.2005 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்தப் புகார்நுங்கம்பாக்கம் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. எனவே நான் கொடுத்த புகாரைஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமோகன் கூறியுள்ளார்.

அனாமிகா விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை நடிகை அனாமிகா மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று கூறி அவரது வீட்டில்முன்பு வேலை பார்த்த சிறுமி புஷ்பலதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.நடிகை அனாமிகாவின் வீட்டில் புஷ்பலதா என்ற சிறுமி முன்பு வேலை பார்த்து வந்தாள். ஆந்திர மாநிலம்சித்தூரைச் சேர்ந்த இந்த சிறுமியை, அனாமிகா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் புஷ்பலதா வீட்டைவிட்டு வெளியேறினாள். இதையடுத்து அவளை போலீஸார் மீட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் புஷ்பலதா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.இந் நிலையில், புஷ்பலதாவின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,கடந்த 17.3.2005 அன்று எனது மகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டாள். அனாமிகாவும், அவரது சகோதரர் நாகராஜனும், எனது மகளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தினார்கள்.இதனால் பல முறை எனது மகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.இதுமட்டுமல்லாமல் எனது மகளின் காலில் இன்னும் தீக்காயம் உள்ளது. இதுதவிர பல முறை எங்களையும்அனாமிகா மிரட்டியுள்ளார். எங்களைத் தாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கடந்த 23.5.2005 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்தப் புகார்நுங்கம்பாக்கம் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. எனவே நான் கொடுத்த புகாரைஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமோகன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நடிகை அனாமிகா மீது கொடுத்த புகாரை போலீஸார் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்று கூறி அவரது வீட்டில்முன்பு வேலை பார்த்த சிறுமி புஷ்பலதாவின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

நடிகை அனாமிகாவின் வீட்டில் புஷ்பலதா என்ற சிறுமி முன்பு வேலை பார்த்து வந்தாள். ஆந்திர மாநிலம்சித்தூரைச் சேர்ந்த இந்த சிறுமியை, அனாமிகா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் புஷ்பலதா வீட்டைவிட்டு வெளியேறினாள்.

இதையடுத்து அவளை போலீஸார் மீட்டு அரசு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.அதன் பின்னர் உயர்நீதிமன்ற தலையீட்டின் பேரில் புஷ்பலதா மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்ஒப்படைக்கப்பட்டார்.

இந் நிலையில், புஷ்பலதாவின் தந்தை மோகன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,கடந்த 17.3.2005 அன்று எனது மகள் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

அனாமிகாவும், அவரது சகோதரர் நாகராஜனும், எனது மகளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தினார்கள்.இதனால் பல முறை எனது மகளுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

இதுமட்டுமல்லாமல் எனது மகளின் காலில் இன்னும் தீக்காயம் உள்ளது. இதுதவிர பல முறை எங்களையும்அனாமிகா மிரட்டியுள்ளார். எங்களைத் தாக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இதனால் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த 23.5.2005 அன்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அந்தப் புகார்நுங்கம்பாக்கம் துணை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. எனவே நான் கொடுத்த புகாரைஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றுமோகன் கூறியுள்ளார்.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil