சிறுமி விவகாரம்: அனாமிகா கைதாகிறார்? வீட்டு வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் பேரில் நடிகை அனாமிகா விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது.பதவி படுத்தும் பாடு படத்தில் நடித்த நடிகை அனாமிகா, தன்னிடம் ரூ. 7 லட்சம் பண மோசடி செய்து விட்டதாக சென்னைமாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் ஒரு புகார்கொடுத்தார். அவர் புகார் கொடுத்த சில நாட்களிலேயே அனாமிகாவும் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில் தன்னை பாலியல் ரீதியாகஜாக்குவார் தங்கம் கொடுமைப்படுத்துவதாகவும், கல்யாணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்வதாகவும், அதற்கு தான் இடம் கொடுக்காத காரணத்தால் தான் தன் மீது பண மோசடி புகாரை அவர் கூறியுள்ளதாகவும்தெரிவித்திருந்தார்.இவர்கள் இருவரது மனுக்களையும் பெற்ற போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ஜாக்குவார் தங்கம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதை விசாரித்த நீதிபதி முருகேசன், ஜாக்குவார் தங்கத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார். அதன்படி தினமும் காலை 10 மணிக்கு சூளைமேடு காவல் நிலையத்தில் (அங்கு தான் ஜாக்குவாருக்கு எதிராக வழக்குதொடரப்பட்டுள்ளது) ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கிடையே அனாமிகா மீது வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் மீது போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கில் அவர் இன்னும் முன் ஜாமீன் பெறவில்லை. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது. இந்த வழக்கை நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் காளி விசாரணை நடத்தி வருகிறார். வழக்கு தொடர்பாக பல முறைஅனாமிகாவை போலீஸார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் போலீஸாரிடம் அவர் சிக்கவில்லை.தற்போது அனாமிகா தெலுங்குப் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By Staff

வீட்டு வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் பேரில் நடிகை அனாமிகா விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது.

பதவி படுத்தும் பாடு படத்தில் நடித்த நடிகை அனாமிகா, தன்னிடம் ரூ. 7 லட்சம் பண மோசடி செய்து விட்டதாக சென்னைமாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் ஒரு புகார்கொடுத்தார்.

அவர் புகார் கொடுத்த சில நாட்களிலேயே அனாமிகாவும் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில் தன்னை பாலியல் ரீதியாகஜாக்குவார் தங்கம் கொடுமைப்படுத்துவதாகவும், கல்யாணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்வதாகவும்,

அதற்கு தான் இடம் கொடுக்காத காரணத்தால் தான் தன் மீது பண மோசடி புகாரை அவர் கூறியுள்ளதாகவும்தெரிவித்திருந்தார்.இவர்கள் இருவரது மனுக்களையும் பெற்ற போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ஜாக்குவார் தங்கம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதை விசாரித்த நீதிபதி முருகேசன், ஜாக்குவார் தங்கத்திற்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கினார்.


அதன்படி தினமும் காலை 10 மணிக்கு சூளைமேடு காவல் நிலையத்தில் (அங்கு தான் ஜாக்குவாருக்கு எதிராக வழக்குதொடரப்பட்டுள்ளது) ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அனாமிகா மீது வேலைக்கார சிறுமி கொடுத்த புகாரின் மீது போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்த வழக்கில் அவர் இன்னும் முன் ஜாமீன் பெறவில்லை. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்றுகூறப்படுகிறது.

இந்த வழக்கை நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் காளி விசாரணை நடத்தி வருகிறார். வழக்கு தொடர்பாக பல முறைஅனாமிகாவை போலீஸார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் போலீஸாரிடம் அவர் சிக்கவில்லை.

தற்போது அனாமிகா தெலுங்குப் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: anamika to be arrested
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X