கோர்ட்டில் சரணடைந்தார் அனாமிகா! வேலைக்காரச் சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் நடிகை அனாமிகா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார். அனாமிகாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதா. இவரை அனாமிகாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்துகொடுமைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந் நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன்கோரி அனாமிகா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறுமாறு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துஅனாமிகா வியாழக்கிழமை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜராகி சரணடைந்தார். இதையடுத்து ரூ. 50,000 ரொக்க முன் ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தினசரி நீதிமன்றத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
வேலைக்காரச் சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் நடிகை அனாமிகா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார்.
அனாமிகாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதா. இவரை அனாமிகாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்துகொடுமைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.
சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந் நிலையில் இவ்வழக்கில் முன் ஜாமீன்கோரி அனாமிகா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறுமாறு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துஅனாமிகா வியாழக்கிழமை சைதாப்பேட்டை 17வது நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு ஆஜராகி சரணடைந்தார்.
இதையடுத்து ரூ. 50,000 ரொக்க முன் ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், தினசரி நீதிமன்றத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications