»   »  அனாமிகாவின் தரிசனம் நேரம் சரியில்லாமல் நொந்து போய்க் கிடக்கும் சர்ச்சை நாயகி அனாமிகா, தனது பிரச்சினைகள் தீர கடவுளைசரணடைந்துள்ளார்.தெலுங்கிலிருந்து வந்த கவர்ச்சி காளியாத்தா அனாமிகா, இன்னும் முழுமையான நடிகையாகவேஅங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்.ஜெயம் படத்தில் வில்லனுக்கு வைப்பாட்டியாக வந்த அனாமிகா, கொஞ்சம் போல பதவி உயர்வு பெற்றுஇரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்தார். நெப்போலியனுடன் வீரண்ணா படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.இப்படி வளர்ந்து வந்த நேரம் பார்த்து வேலைக்காரப் பெண்ணை சித்திரவதை செய்தது, சண்டைப் பயிற்சியாளர்ஜாகுவார் தங்கத்திடம் தகராறு என வரிசையாக சிக்கல்கள் வந்து சேர்ந்து குத்தாட்டம் போட்டன.ஏகப்பட்ட வழக்குகள், போலீஸ் விசாரணை என அல்லோகலகப்பட்ட அனாமிகாவை படத்தில் புக் செய்யவேதயாரிப்பாளர்கள் பயப்படத் தொடங்கினர். அவரை புக் செய்து வைத்திருந்த ஓருவரும் படத்திலிருந்து அவரை கழற்றி விட்டு விட்டனர். எங்கே இவரை வைத்து படம் எடுக்கப் போய், நம்மைப் பற்றி ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விடுவாரோ என்றஅச்சம் காரணமாக அனாமிகாவைப் புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர்.இதன் விளைவாக ஒரு படம் இல்லாத ஓட்டாண்டியாக மாறி விட்டார் அனாமிகா. ஏன் இப்படி ஆச்சு என்றுஅவர் புலம்பியது, கோலிவுட் ஜோசியர்கள் காதுகளுக்குப் பாய, ஓடோடி வந்த அந்த புண்ணியாவன்கள்,சனீஸ்வரர் தான் உங்களது இத்தனை தொல்லைகளுக்கும் காரணம். திருநிள்ளாறு போய் ஒரு சிறப்பு அர்ச்சனை செய்து வாருங்கள், அப்படியே உங்களுக்குப் பிடித்த கோவில்களுக்கும்ஒரு விசிட் அடியுங்கள். எல்லாம் சரியாப் போகும் என்று ஊதி விட்டனர்.இதைத் தொடர்ந்து திருநள்ளாறு, திருப்பதி என பல கோவில்களை வலம் வந்து முடித்துள்ளாராம் அனாமிகா.இனியாவது பிரச்சினை தீர்ந்து, பொழப்பு நல்லாப் போகுமா என்ற கவலையில் மூழ்கியுள்ளார்களாம்அனாமிகாவும், அவரது பாட்டியும் (அவர்தான் அனாமிகாவின் காட்மதர்!

அனாமிகாவின் தரிசனம் நேரம் சரியில்லாமல் நொந்து போய்க் கிடக்கும் சர்ச்சை நாயகி அனாமிகா, தனது பிரச்சினைகள் தீர கடவுளைசரணடைந்துள்ளார்.தெலுங்கிலிருந்து வந்த கவர்ச்சி காளியாத்தா அனாமிகா, இன்னும் முழுமையான நடிகையாகவேஅங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்.ஜெயம் படத்தில் வில்லனுக்கு வைப்பாட்டியாக வந்த அனாமிகா, கொஞ்சம் போல பதவி உயர்வு பெற்றுஇரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்தார். நெப்போலியனுடன் வீரண்ணா படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.இப்படி வளர்ந்து வந்த நேரம் பார்த்து வேலைக்காரப் பெண்ணை சித்திரவதை செய்தது, சண்டைப் பயிற்சியாளர்ஜாகுவார் தங்கத்திடம் தகராறு என வரிசையாக சிக்கல்கள் வந்து சேர்ந்து குத்தாட்டம் போட்டன.ஏகப்பட்ட வழக்குகள், போலீஸ் விசாரணை என அல்லோகலகப்பட்ட அனாமிகாவை படத்தில் புக் செய்யவேதயாரிப்பாளர்கள் பயப்படத் தொடங்கினர். அவரை புக் செய்து வைத்திருந்த ஓருவரும் படத்திலிருந்து அவரை கழற்றி விட்டு விட்டனர். எங்கே இவரை வைத்து படம் எடுக்கப் போய், நம்மைப் பற்றி ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விடுவாரோ என்றஅச்சம் காரணமாக அனாமிகாவைப் புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர்.இதன் விளைவாக ஒரு படம் இல்லாத ஓட்டாண்டியாக மாறி விட்டார் அனாமிகா. ஏன் இப்படி ஆச்சு என்றுஅவர் புலம்பியது, கோலிவுட் ஜோசியர்கள் காதுகளுக்குப் பாய, ஓடோடி வந்த அந்த புண்ணியாவன்கள்,சனீஸ்வரர் தான் உங்களது இத்தனை தொல்லைகளுக்கும் காரணம். திருநிள்ளாறு போய் ஒரு சிறப்பு அர்ச்சனை செய்து வாருங்கள், அப்படியே உங்களுக்குப் பிடித்த கோவில்களுக்கும்ஒரு விசிட் அடியுங்கள். எல்லாம் சரியாப் போகும் என்று ஊதி விட்டனர்.இதைத் தொடர்ந்து திருநள்ளாறு, திருப்பதி என பல கோவில்களை வலம் வந்து முடித்துள்ளாராம் அனாமிகா.இனியாவது பிரச்சினை தீர்ந்து, பொழப்பு நல்லாப் போகுமா என்ற கவலையில் மூழ்கியுள்ளார்களாம்அனாமிகாவும், அவரது பாட்டியும் (அவர்தான் அனாமிகாவின் காட்மதர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேரம் சரியில்லாமல் நொந்து போய்க் கிடக்கும் சர்ச்சை நாயகி அனாமிகா, தனது பிரச்சினைகள் தீர கடவுளைசரணடைந்துள்ளார்.

தெலுங்கிலிருந்து வந்த கவர்ச்சி காளியாத்தா அனாமிகா, இன்னும் முழுமையான நடிகையாகவேஅங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்.

ஜெயம் படத்தில் வில்லனுக்கு வைப்பாட்டியாக வந்த அனாமிகா, கொஞ்சம் போல பதவி உயர்வு பெற்றுஇரண்டாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்தார்.

நெப்போலியனுடன் வீரண்ணா படத்தில் ஜோடியாகவும் நடித்துள்ளார்.


இப்படி வளர்ந்து வந்த நேரம் பார்த்து வேலைக்காரப் பெண்ணை சித்திரவதை செய்தது, சண்டைப் பயிற்சியாளர்ஜாகுவார் தங்கத்திடம் தகராறு என வரிசையாக சிக்கல்கள் வந்து சேர்ந்து குத்தாட்டம் போட்டன.

ஏகப்பட்ட வழக்குகள், போலீஸ் விசாரணை என அல்லோகலகப்பட்ட அனாமிகாவை படத்தில் புக் செய்யவேதயாரிப்பாளர்கள் பயப்படத் தொடங்கினர்.

அவரை புக் செய்து வைத்திருந்த ஓருவரும் படத்திலிருந்து அவரை கழற்றி விட்டு விட்டனர்.

எங்கே இவரை வைத்து படம் எடுக்கப் போய், நம்மைப் பற்றி ஏதாவது ஏடாகூடமாக சொல்லி விடுவாரோ என்றஅச்சம் காரணமாக அனாமிகாவைப் புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டினர்.


இதன் விளைவாக ஒரு படம் இல்லாத ஓட்டாண்டியாக மாறி விட்டார் அனாமிகா. ஏன் இப்படி ஆச்சு என்றுஅவர் புலம்பியது, கோலிவுட் ஜோசியர்கள் காதுகளுக்குப் பாய, ஓடோடி வந்த அந்த புண்ணியாவன்கள்,சனீஸ்வரர் தான் உங்களது இத்தனை தொல்லைகளுக்கும் காரணம்.

திருநிள்ளாறு போய் ஒரு சிறப்பு அர்ச்சனை செய்து வாருங்கள், அப்படியே உங்களுக்குப் பிடித்த கோவில்களுக்கும்ஒரு விசிட் அடியுங்கள். எல்லாம் சரியாப் போகும் என்று ஊதி விட்டனர்.

இதைத் தொடர்ந்து திருநள்ளாறு, திருப்பதி என பல கோவில்களை வலம் வந்து முடித்துள்ளாராம் அனாமிகா.

இனியாவது பிரச்சினை தீர்ந்து, பொழப்பு நல்லாப் போகுமா என்ற கவலையில் மூழ்கியுள்ளார்களாம்அனாமிகாவும், அவரது பாட்டியும் (அவர்தான் அனாமிகாவின் காட்மதர்!).

அனாமிகாவின் கலைச் சேவை தங்கு தடையின்றி தொடர நாமும் பிரார்த்திப்போம்!


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil