»   »  மீண்டும் விவகாரத்தில் அனாமிகா!

மீண்டும் விவகாரத்தில் அனாமிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை கடைபிடிக்கவில்லை என்றும், தனது வழக்கறிஞரின் லெட்டர்பேடையேதிருடி விட்டதாகவும் நடிகை அனாமிகா மீது புதிய புகார்கள் கிளம்பியுள்ளன.

ஆந்திராவைச் சேர்ந்த அனாமிகா, தமிழில் பதவி படுத்தும் பாடு, கிரிவலம், குருதேவா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.அவரது முகமே மக்களிடம் இன்னும் அழுத்தமாக பதியாத நிலையில், படு வேகமாக செய்திகளில் அடிபடத் தொடங்கி விட்டார்.

வீட்டில் இல்லாத வேலைகள் நடப்பதாகவும், ஆண்கள் நடமாட்டம் ஓவர், இரவில் யார் யாரோ வந்து செல்கிறார்கள் என்றும்பேச்சு அடிபட்டு நாறினார்.

இந் நிலையில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதாவை கொடுமைப்படுத்தியதால் அந்த சிறுமி வீட்டை விட்டுவெளியேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் சிறுமியை போலீஸார் மீட்டு அரசுக் காப்பகத்தில் சேர்த்தனர். அதன்பின்னர் அவளது பெற்றோர் உயர்நீதிமன்றத்தை அணுகி சிறுமியை மீட்டனர்.

சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம், சிறுமி புஷ்பலதாவை அனாமிகாஇனிமேல் பார்க்கவோ, பேசவோ கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், புஷ்பலதாவின் பெற்றோரை சந்தித்த அனாமிகா, அவர்களை மிரட்டி வெற்றுத்தாள்கள் சிலவற்றில் கையெழுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, புஷ்பலதா குடும்பத்தினர் தனக்கு எதிராக எதையும் சொல்லக் கூடாது என்று அண்ணன் நாகராஜன் மூலம் அடிக்கடிமிரட்டல் விடுத்து வருவதாகவும் புகார் கிளம்பியுள்ளது.

அது மட்டுமல்லாது, 3 வருடம் புஷ்பலதாவை வேலை பார்த்ததற்கான சம்பளப் பணத்தை புஷ்பலதாவிடம், கொடுக்குமாறு அவர்பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அரசுக் காப்பகம் நடிகை அனாமிகாவுக்கு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் அதையும் அனாமிகா செய்யவில்லை என்று தெரிகிறது. ஆனால் தான் பணத்தைக் கொடுத்து விட்டதாக புஷ்பலதாவின்பெற்றோரை மிரட்டி அனாமிகா கையெழுத்து வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் அனாமிகாவுக்காக இந்த வழக்கில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சிவா, எழும்பூர் காவல் நிலையத்தில் ஒரு பகீர்புகார் கொடுத்துள்ளார். அதில், வழக்கு சம்பந்தமாக எனது அலுவலகத்திற்கு நடிகை அனாமிகா அடிக்கடி வருவார். அவரதுஅண்ணன் நாகராஜனும் வருவது வழக்கம்.

இப்படி வந்து செல்கையில், எனது லெட்டர் பேட் ஒன்றை அவர்கள் திருடிச் சென்று விட்டனர். அதில் ஒரு தாளில் சிறுமிபுஷ்பலதாவின் கையெழுத்தை வாங்கி வைத்துள்ளார். அதைக் கொண்டு அனாமிகா தவறான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.எனவே அந்தத் தாளையும், எனது லெட்டர் பேடையும் போலீஸார் பறிமுதல் செய்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகூறியுள்ளார்.

இந்தப் புதிய புகாரால் அனாமிகாவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை மீறும் வகையில் சிறுமியின்குடும்பத்தினரைப் பார்த்து மிரட்டி, எழுதி வாங்கியது, வழக்கறிஞரின் லெட்டர் பேடையே திருடி தவறாகப் பயன்படுத்தியதுபோன்ற புகார்களால் அனாமிகா மீது காவல்துறையினர் மீண்டும் நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.


Read more about: anamika in trouble again

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil