»   »  செக்ஸ் மிரட்டல்: அனாமிகா மீது ஸ்டண்ட் மாஸ்டர் புகார் !

செக்ஸ் மிரட்டல்: அனாமிகா மீது ஸ்டண்ட் மாஸ்டர் புகார் !

Subscribe to Oneindia Tamil

ரூ. 7 லட்சம் பணத்தை கடன் வாங்கி விட்டு, அதைத் திரும்பிக் கேட்டால், செக்ஸ் தொல்லை தருவதாக போலீசில் புகார்கொடுப்பேன் என்று நடிகை அனாமிகா மிரட்டுவதாக பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் சென்னை மாநகரகாவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

நடிக்க வந்து ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை. அதற்குள், நடிகை அனாமிகா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். வீட்டிலேயே இவர் பலான தொழில் நடத்துவதாக புகார் வந்தது.

பின்னர் வேலைக்கார சிறுமியை அடித்துத் துன்புறுத்தியதாக அவர் மீது சமீபத்தில் புகார் எழுந்தது. ஒருவருடன் அலங்கோலக்கோலத்தில் இருந்தபோது சிறுமி பார்த்ததால், பிரச்சனை என்றார்கள்.

இந்தப் பிரச்சினையிலிருந்து ஒரு வழியாக அவர் மீண்டபோது, தனது வக்கீலின் லெட்டர் பேடை திருடி விட்டதாக மற்றொருபுகார் கூறப்பட்டது.

இந் நிலையில், பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் அனாமிகா மீது புதிய புகாரைக் கூறியுள்ளார். இதுதொடர்பாகசென்னை காவல்துறை ஆணையாளர் நடராஜை சந்தித்து அவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:

கடந்த 25 வருடங்களாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறேன். 300க்கும் மேற்பட்ட படங்களில் மாஸ்டராகபணியாற்றியிருக்கிறேன்.

கடந்த 15 மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்ற அனாமிகா என்ற பெண்ணை என்னிடம் எனது நண்பர்அறிமுகம் செய்து வைத்தார். அனாமிகாவுடன் அவரது அண்ணன் நாகராஜ், தம்பி பாலாஜி ஆகியோரும் வந்திருந்தனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளதாகவும், சூளைமேட்டில் குடியிருப்பதாகவும் அனாமிகா கூறினார். சினிமாவில்நடிக்க வாய்ப்பு வாங்கித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கேட்டால் என்னைத்தவறாக நினைப்பார்கள் என்பதால் மறுத்து விட்டேன்.

ஆனால் அனாமிகாவும், அவரது சகோதரர்களும் தொடர்ந்து என்னை வற்புறுத்தி வந்தனர். இதையடுத்து குருதேவா படத்தின்இயக்குனர் மற்றும் தயாப்பாளரிடம் அனாமிகாவை அறிமுகம் செய்து வைத்தேன். அதன் பிறகு பதவி படுத்தும் பாடு,கிரிவலம், அதே, வீரண்ணா உள்ளிட்ட படங்களிலும் வாய்ப்பு வாங்கித் தந்தேன்.

இதற்காக எனக்கு அனாமிகாவும், அவரது சகோதரர்களும் எனது வீட்டுக்கு வந்து நன்றி கூறுவார்கள், திருப்பதி லட்டும்கொடுப்பார்கள். கடந்த 15 மாதங்களாக அனாமிகாவும், அவரது சகோதரர்களும் என்னிடம் ரூ. 3 லட்சம் ரூபாயும், எனதுநண்பர்கள் வீரமணி, கண்ணன், மோகன், பிரபாகரன் ஆகியோடம் ரூ. 4 லட்சம் ரூபாயும் மொத்தம் ரூ. 7 லட்சம் கடன்வாங்கியுள்ளனர்.

பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காக சூளைமேடு வீரபாண்டி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன். அப்போதுவேலைக்காரச் சிறுமி புஷ்பலதா பிரச்சினையில் சிக்கியிருந்தார் அனாமிகா. சிறுமியை செனாய் நகர் காப்பகத்திலிருந்து கூட்டிவர வேண்டும், என்னுடன் வாருங்கள் என்று அனாமிகா கேட்டதால், அவருடன் சென்றேன். ஆனால் அவர்கள் சிறுமியைஒப்படைக்க மறுத்து விட்டார்கள்.

பின்னர் வீட்டை காலி செய்து விட்டார் அனாமிகா. வடபழனி நெற்குன்றம் சாலையில் உள்ள வீட்டுக்குக் குடியேறியஅனாமிகாவை தேடிக் கண்டுபிடித்தேன். பணம் குறித்து கேட்டபோது ஒரு மாதத்தில் தந்து விடுவதாக அவர் கூறினார்.

பின்னர் ஒரு மாதம் கழித்து இரவில் அந்த வீட்டுக்குப் போனேன். அப்போது சிறுமி புஷ்பலதாவிடம், அவரது தந்தையிடம்அனாமிகா மற்றும் அவரது சகோதரர்கள் மிரட்டி வெற்றுத் தாளிலும், வழக்கறிஞன் லெட்டர் பேடிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தனர். ஒரு வாரம் கழித்து என்னை வரச் சொன்னார்கள்.

பின்னர் ஒரு வாரம் கழித்து சென்றபோது அவர் வீட்டை காலி செய்து விட்டது தெரிந்தது. சூளைமேட்டில் பஜனை கோவில்தெருவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறியிருந்த அனாமிகாவை கண்டுபிடித்து பணம் கேட்டபோது, ஒரு வாரம்கழித்து வருமாறு கூறினார்.

அதேபோல சென்று கேட்டபோது, உங்களிடம் பணம் வாங்கியதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை, எனவே பணம் தர முடியாது.மீறிக் கேட்டால், என்னை செக்ஸ் தொல்லை கொடுத்து டார்ச்சர் செய்ததாகவும், கல்யாணம் செய்து கொள்ளுமாறுவற்புறுத்துவதாகவும் கூறி போலீஸில் புகார் கொடுத்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வீடு திரும்பி விட்டேன். பின்னர் போன் மூலம் தொடர்பு கொண்டு இனிமேல் பணத்திற்காகவீடு தேடி வந்தால் உன்னையும், குடும்பத்தையும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அனாமிகாமிரட்டினார்.

இதையடுத்து அடிக்கடி சிலர் போன் செய்து தெலுங்கு கலந்த தமிழில் பேசி என்னையும், குடும்பத்தினரையும் மிரட்டுகிறார்கள்.

சமீபத்தில் ஆறு பேர் கத்தியுடன் எனது வீட்டிற்கு வந்து மிரட்டி விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக கே.கே. நகர் போலீஸில்புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கும், என் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அனாமிகா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துஎனது பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று மனுவில் தங்கம் கூறியுள்ளார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil