»   »  ஸ்டண்ட் மாஸ்டர் மீது அனாமிகா பாலியல் புகார்!

ஸ்டண்ட் மாஸ்டர் மீது அனாமிகா பாலியல் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது சர்ச்சைக்குரிய நடிகை அனாமிகா, பாலியல் புகார்கொடுத்துள்ளார்.

பதவி படுத்தும் பாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் ஆந்திராவைச் சேர்ந்த அனாமிகா. நடிக்க வந்து ஓரு படங்கள் கூடவெளி வராத நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் இவர் தொடர்ந்து சிக்கி வருகிறார்.

அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமி புஷ்பலதாவை கொத்தடிமை போல அனாமிகாவும், அவரது அண்ணன்குடும்பத்தாரும் நடத்தியதாக சமீபத்தில் புகார் கிளம்பியது. இது தொடர்பாக போலீஸிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பரபரப்புப் புகார் ஒன்றை மாநகரஆணையர் நடராஜை சந்தித்துக் கொடுத்தார்.

அந்தப் புகாரில், நடிகை அனாமிகா ரூ. 7 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாகவும், அதைத்திருப்பிக் கேட்டபோது ரவுடிகளை வைத்து அடித்து விடுவதாக மிரட்டியதாகவும் தங்கம் தனது புகாரில் கூறியிருந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் புஷ்பலதா மூலம் அனாமிகா சர்ச்சையில் சிக்கினார். கோர்ட் உத்தரவுப்படி தனக்குசேரவேண்டிய சம்பளப் பணத்தை அனாமிகா தரவில்லை என்று புஷ்பலதா தரப்பில் கமிஷனர் நடராஜிடமும், முதல்வரின்தனிப்பிரிவிலும் புகார் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அனாமிகாவை விசாரிக்க போலீஸார் முடிவு செய்தபோது அவர் திடீரென தலைமறைவானார். இந் நிலையில்இன்று திடீரென தனது வழக்கறிஞருடன் அனாமிகா, கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அங்கு ஒரு புகாரைக் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அனாமிகா பேசுகையில், ஜாக்குவார் தங்கமும், புஷ்பலதாவும் கூறுவதில் உண்மை இல்லை. நான்யாரிடமும் ஒரு பைசா கூட கடன் வாங்கியதில்லை. யாரையும் நான் ஏமாற்றவில்லை.

ஜாக்குவார் தங்கம் கூறுவதில் ஒன்று மட்டும் தான் உண்மை. என்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறுவதுமட்டும்தான் உண்மை. ஆனால் அதையே சாதகமாகக் கொண்டு என்னிடம் பாலியல் வன்முறையில் அவர் ஈடுபட்டார்.

எனது வீட்டுக்கு வந்து கையைப் பிடித்து இழுத்தும், ஆபாசமாகப் பேசியும், தனது ஆசைக்கு இணங்குமாறும் அவர்வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்து விட்டேன்.

இதைத் தொடர்ந்து நேரிலும், தொலைபேசி மூலமாகவும் என்னை மிரட்டி வருகிறார் ஜாகுவார் தங்கம். இப்போது 7 லட்சம்பணத்தை வாங்கி விட்டுத் தர மறுப்பதாக புகார் கொடுத்துள்ளார்.

அவரது பாலியல் தொந்தரவுகள் மற்றும் மிரட்டல் காரணமாக நானும், எனது குடும்பத்தாரும் பெரிதும் பயந்து போயுள்ளோம்.எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கக் கோரியும், ஜாக்குவார் தங்கம் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரி புகார் மனுகொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார் அனாமிகா.

அனாமிகா விவகாரம் முடிவுக்கு வராமல் தினசரி ஒரு புகார் கிளம்பி வருவது தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil