திருமணம் செய்யுமாறு மிரட்டுகிறார் அனாமிகா- ஜாக்குவார் தங்கம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார் என்று நடிகை அனாமிகா மீது ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.கிரிவலம், அமுதே, பதவி படுத்தும் பாடு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை அனாமிகா. இது தவிரமேலும் சில படங்களில் இவர் நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பதி அருகே உள்ள சுரக்கம்பாடி கிராமமாகும்.நடிகை அனாமிகா மீது அவரது வீட்டில் வேலை பார்த்த சிறுமி புஷ்பலதா, சென்னை போலீஸ் கமிஷனர் நட்ராஜிடம் ஒரு புகார்கொடுத்தார். அதில் தனக்கு சம்பளம் தராமல் அனாமிகா சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்த புகாரால் சினிமாவட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது சம்பந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் நடிகை அனாமிகா மீது பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஒரு புகார் கொடுத்தார். அதில்தன்னிடம் அனாமிகா கடனாக வாங்கிய ரூ.7 லட்சத்தை திருப்பித் தரவில்லை என்றும் திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார் என்றும்குறிப்பிட்டிருந்தார்.இது ஒரு புறமிருக்க, அனாமிகா, ஜாக்குவார் தங்கம் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில், ஜாக்குவார் தங்கம் என் கையை பிடித்துஇழுத்து செக்ஸ் தொந்தரவு செய்தார் என்று கூறினார்.அடுத்தடுத்த இந்த புகார்களால் கோடம்பாக்கத்தில் அனாமிகா விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.இந்த நிலையில் ஜாக்குவார் தங்கம் கூறுகையில், அனாமிகாவின் சகோதரர்களால் சிறுமி புஷ்பலதாவின் உயிருக்கு ஆபத்துஇருப்பதால், இது குறித்து புகார் கொடுக்க சித்தூர் சென்றேன். அப்போது எங்களை தாக்குவதற்கு அனாமிகாவின் சகோதரர்களும்,அவரது நண்பர்களும் முயன்றனர்.சென்யைை சேர்ந்த ராஜராஜன் என்பவர் மூலம் அனாமிகா எனக்கு அறிமுகமானார். இதனால் அவருக்கு ஏராளமான உதவிகளைசெய்துள்ளேன். ரூ.7 லட்சம் வரை அவருக்கு நான் கடன் கொடுத்துள்ளேன்.அந்தப் பணத்தை நான் திருப்பிக் கேட்டபோது, என் மீது அவர் கற்பழிப்பு புகார் கூறினார். என்னை பிளாக்மெயில் செய்கிறார்.அனாமிகா மீது நான் தான் முதலில் புகார் கொடுத்தேன். இதனால் சில நாட்கள் அவர் தலைமறைவாக இருந்தார்.பணத்துக்கு பதில் என்னை வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அவர் என்னிடம் கூறினார் என்றார் தங்கம்.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுகிறார் என்று நடிகை அனாமிகா மீது ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
கிரிவலம், அமுதே, பதவி படுத்தும் பாடு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை அனாமிகா. இது தவிரமேலும் சில படங்களில் இவர் நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருப்பதி அருகே உள்ள சுரக்கம்பாடி கிராமமாகும்.
நடிகை அனாமிகா மீது அவரது வீட்டில் வேலை பார்த்த சிறுமி புஷ்பலதா, சென்னை போலீஸ் கமிஷனர் நட்ராஜிடம் ஒரு புகார்கொடுத்தார். அதில் தனக்கு சம்பளம் தராமல் அனாமிகா சித்ரவதை செய்ததாக கூறியிருந்தார். இந்த புகாரால் சினிமாவட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது சம்பந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகை அனாமிகா மீது பிரபல சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஒரு புகார் கொடுத்தார். அதில்தன்னிடம் அனாமிகா கடனாக வாங்கிய ரூ.7 லட்சத்தை திருப்பித் தரவில்லை என்றும் திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார் என்றும்குறிப்பிட்டிருந்தார்.
இது ஒரு புறமிருக்க, அனாமிகா, ஜாக்குவார் தங்கம் மீது ஒரு புகார் கொடுத்தார். அதில், ஜாக்குவார் தங்கம் என் கையை பிடித்துஇழுத்து செக்ஸ் தொந்தரவு செய்தார் என்று கூறினார்.
அடுத்தடுத்த இந்த புகார்களால் கோடம்பாக்கத்தில் அனாமிகா விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் ஜாக்குவார் தங்கம் கூறுகையில், அனாமிகாவின் சகோதரர்களால் சிறுமி புஷ்பலதாவின் உயிருக்கு ஆபத்துஇருப்பதால், இது குறித்து புகார் கொடுக்க சித்தூர் சென்றேன். அப்போது எங்களை தாக்குவதற்கு அனாமிகாவின் சகோதரர்களும்,அவரது நண்பர்களும் முயன்றனர்.
சென்யைை சேர்ந்த ராஜராஜன் என்பவர் மூலம் அனாமிகா எனக்கு அறிமுகமானார். இதனால் அவருக்கு ஏராளமான உதவிகளைசெய்துள்ளேன். ரூ.7 லட்சம் வரை அவருக்கு நான் கடன் கொடுத்துள்ளேன்.
அந்தப் பணத்தை நான் திருப்பிக் கேட்டபோது, என் மீது அவர் கற்பழிப்பு புகார் கூறினார். என்னை பிளாக்மெயில் செய்கிறார்.அனாமிகா மீது நான் தான் முதலில் புகார் கொடுத்தேன். இதனால் சில நாட்கள் அவர் தலைமறைவாக இருந்தார்.
பணத்துக்கு பதில் என்னை வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அவர் என்னிடம் கூறினார் என்றார் தங்கம்.


Click it and Unblock the Notifications