தனுஷ் ஹீரோயினின் வருங்கால கணவரின் பங்களா மதிப்பை கேட்டால் தலையே சுத்திடும்!
Recommended Video

மும்பை: நடிகை சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகு குடியேறப் போகும் பங்களாவின் விலை அமிதாப் பச்சன் பங்களாவை விட அதிகம் ஆகும்.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான ஆனந்த அஹுஜாவை வரும் 8ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார். இதையடுத்து மும்பை மற்றும் டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆனந்த் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கும் திருமண வரவேற்பு நடைபெறுகிறது.

டெல்லி
டெல்லியில் உள்ள ஆனந்த் அஹுஜாவின் பங்களா அப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த வீடுகளில் ஒன்று ஆகும். அந்த பங்களா அமிதாப் பச்சனின் பங்களாவான ஜல்சா மற்றும் அக்ஷய் குமார், ஆமீர் கான், நடிகை கங்கனாவின் வீடுகளை விட விலை உயர்ந்தது.

பங்களா
ஆனந்த் அஹுஜா பங்களாவின் மதிப்பு ரூ. 173 கோடி ஆகும். இந்தியாவின் பெரிய எக்ஸ்போர்ட் ஹவுஸ் வைத்துள்ள ஹரிஷ் அஹுஜாவின் பேரன் தான் ஆனந்த். டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் 3 ஆயிரத்து 170 சதுர அடியில் பங்களா அமைந்துள்ளது.

ஜல்சா
மும்பை ஜுஹு பகுதியில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களாவான ஜல்சாவின் மதிப்பு ரூ. 160 கோடி ஆகும். அதே சமயம் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்தின் மதிப்பு ரூ. 200 கோடி ஆகும்.

ஷில்பா
நடிகர் அக்ஷய் குமாரின் டூப்லெக்ஸ் அபார்ட்மென்ட்டின் மதிப்பு ரூ. 80 கோடி ஆகும். ஜுஹு கடற்கரை அருகே உள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் பங்களாவான கினாராவின் விலை ரூ. 100 கோடி ஆகும்.

கங்கனா
ஆமீர் கான் தனது மனைவி மற்றும் மகன் ஆசாத் ராவுடன் தங்கியிருக்கும் பெல்லா விஸ்டா அபார்ட்மென்ட்டின் விலை ரூ. 60 கோடி. நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களாவின் மதிப்பு ரூ. 30 கோடி ஆகும்.


Click it and Unblock the Notifications











