ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஒருத்தரும் உதவலை..டிஜிட்டல்ல வெளியிடலாமா? சந்தானம் பட இயக்குனர் சோகம்!

By

சென்னை: சந்தானம் நடித்துள்ள படம் வெளியாகாதது பற்றி, அதன் இயக்குனர் ட்விட்டரில் கோபமாகப் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Amazonல் வெளியாகும் தமிழ் படங்கள் | Master, Soorarai pottru

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், 'சர்வர் சுந்தரம்'. ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயின்.

கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், ராதாரவி, செஃப் தாமோதரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

உணவின் மேன்மை

உணவின் மேன்மை

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை, துபாய் வரை சென்று முடிவது போல அமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் ரிலீஸ்

டிசம்பர் ரிலீஸ்

நாகேஷ் நடித்த பழைய 'சர்வர் சுந்தரம்' படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர். இதில் நாகேஷ் பேரன் பிஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரிலீஸ் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போயிருக்கிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவித்தனர். பிறகும் தள்ளிப் போனது.

ஆடி அடங்கும்

ஆடி அடங்கும்

இந்நிலையில், படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, தனது ட்விட்டர் பதிவில் அவ்வப்போது தனது படம் பற்றி பதிவிட்டு வருவார். இப்போது, 'உன் காசு என் காசுன்னு சொல்லி, ஆக மொத்தம் ஒன்றுக்கும் உதவல. 'சர்வர் சுந்தரம்' படத்தை வெளியிட்டு இருக்கலாம் இல்லடா. ஆடி அடங்கும் வாழ்க்கையடா' என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.

உதவத் தயாரில்லை

உதவத் தயாரில்லை

மற்றொரு பதிவில், இந்தப் படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கும் ரசிகர்களுக்கு, தவறான வியாபாரிகளின் முதிர்ச்சியில்லாத அணுகுமுறை, சம்பந்தமில்லாதவர்களின் தலையீடு, பொறுப்பான நபர்கள் கை கழுவியது, படத்தின் ரிலீஸுக்கு யாரும் உதவத் தயாரில்லை.

டிஜிட்டலில்

டிஜிட்டலில்

பொறுப்பில்லாத ஒருவர் படத்தை வாங்க, பொறுப்புள்ளவர் பொறுப்பில்லாமல் நடப்பதன் பின்விளைவுதான். நம்பிக்கைதான் வாழ்க்கை. பொறுத்திருப்போம். இனி ரீலிஸைத் தவிர எதுவுமில்லை அனுபவிக்க' என்று கூறியுள்ள அவர், மற்றொரு பதிவில், 'சர்வர் சுந்தரம்' படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா? என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X