முடிவுக்கு வந்தது அந்த தயாரிப்பு பிரச்னை.. அந்த இயக்குனர் படத்தில் இப்ப விஷால்தான் நடிக்கிறாராம்!
சென்னை: ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், லாக்டவுன் முடிந்ததும் தொடங்க இருக்கிறது.
Recommended Video
நடிகர் விஷால், துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரசன்னா, ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கி வந்தார். படப்பிடிப்பின்போது மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டது.

ராணுவ அதிகாரி
இதையடுத்து படத்தில் இருந்து விலகினார், மிஷ்கின். அவர் விலகியதற்கான காரணத்தை விஷால் தெரிவித்தார். பின்னர் மிஷ்கின், விஷாலை கடுமையாகத் திட்டினார். இதனால் பிரச்னை பரபரப்பானது. பின்னர், துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்குவதாக அறிவித்தார், விஷால். சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

ஸ்ரத்தா ஶ்ரீநாத்
இதற்கிடையே, எம்.எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படத்தில், ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா காஸன்ட்ரா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மனோபாலா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனந்த் ஷங்கர்
இந்த இரண்டு படங்களையும் தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரித்து வருகிறார். இந்நிலையில், ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திலும் அவர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனந்த் ஷங்கர், விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுருகன், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர்.

ஆர்யா வில்லன்
அவர் கதையை கேட்ட விஷால், நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். விஷால் ஜோடியாக ரிது வர்மா, வில்லனாக ஆர்யா நடிப்பதாகக் கூறப்பட்டது. படத்தை, விஷால் சொந்தமாகத் தயாரிக்க இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்கான பட்ஜெட், விஷால் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால், ஏற்கனவே 2 படங்களை தயாரித்து வரும் விஷால், இதை தயாரிக்க மறுத்து விட்டதாகக் கூறப்பட்டது.

லாக்டவுன் முடிந்ததும்
இதனால், ஆனந்த் ஷங்கர் வேறு தயாரிப்பாளரைத் தேடி வந்தார். மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார், இதைத் தயாரிக்க இருப்பதாகவும் விஷாலுக்குப் பதில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் விஷாலே இந்த படத்தில் நடிப்பதாகவும் வினோத்குமார் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. லாக்டவுன் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











