பல வருட காதலாமே.. திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகை ஆனந்தியின் கணவர் இவர்தான்!

By

ஐதராபாத்: திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகை ஆனந்தியின் கணவர் யார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

Recommended Video

Kayal Anandhi Wedding Bells | Agni siragugal Co Director Socrates Weds Anandhi -Filmibeat Tamil

தமிழில், கயல் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. தெலுங்கானாவை சேர்ந்தவர் இவர்.

தெலுங்கில் வெளியான, ஈ ராஜூலு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கவனிக்கப்பட்ட நடப்பு

கவனிக்கப்பட்ட நடப்பு

ரக்‌ஷிதா என்ற பெயரில் அங்கு நடித்து வந்த அவர், தமிழுக்கு ஆனந்தி என மாறினார். தமிழில், 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படம் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது.

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

இதையடுத்து 'கயல்' ஆனந்தி ஆனார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.
பின்னர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உட்பட சில படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார்.

ஸோம்பி ரெட்டி

ஸோம்பி ரெட்டி

இப்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில், ஸோம்பி ரெட்டி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை ஆனந்திக்கு தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நேற்றிரவு சாக்ரட்டீஸ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

மனைவியின் தம்பி

மனைவியின் தம்பி

முதலில் இது காதல் திருமணம் அல்ல என்று கூறப்பட்டது. ஆனால், இது காதல் திருமணம் என்று இப்போது தெரியவந்துள்ளது. சில வருடங்களாக ஆனந்தியும் அவரும் காதலித்து வந்துள்ளனர். மணமகன் சாக்ரட்டீஸ், இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் இயக்குனர் மூடர் கூடம் நவீனின் மைத்துனர். அதாவது நவீன் மனைவியின் தம்பி.

இந்து முறைப்படி

இந்து முறைப்படி

நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் இணை இயக்குனராக, சாக்ரடீஸ் பணியாற்றியுள்ளார். இப்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச் சிறக்குகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X