வளர்த்து ஆளாக்கிய ஆயாவை மறக்காத ஆனந்த் அம்பானி.. அவர் வெளியிட்ட உருக்கமான போஸ்ட்!

மும்பை: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ஆனந்த் அம்பானியை வளர்த்த நானி லலிதா டி சில்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட போஸ்ட் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் பல பிரபலங்கள் கலந்து கொண்ட பிரமாண்டமான திருமண விழாவாக கடந்த சில மாதங்களாகவே நடைபெற்ற நிலையில், சமீபத்தில் திருமாங்கல்யமும் கட்டப்பட்டது. அம்பானி குடும்பத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு செழுமை மற்றும் நேர்த்தியுடன் நடைபெற்றது.

Anant Ambani wedding Radhika Merchant

சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு பல வகையான உணவுகள், விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் என விருந்தினர்களை சந்தோஷத்தின் உச்சத்துக்கே அம்பானி கொண்டு சென்று விட்டார் என்கின்றனர்.

ஆயாம்மாவின் வாழ்த்து: ஆனந்த் அம்பானியை குழந்தைப் பருவத்தில் வளர்த்தவர் தான் கரீனா கபூரின் மகன் தைமூரையும் வளர்த்த லலிதா டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துக் கொண்ட அவர், உணர்ச்சி பொங்க மணமக்களை வாழ்த்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவ்வை சண்முகி படத்தில் குழந்தையை வளர்க்க கமல்ஹாசன் செல்வது போல பல பணக்கார குடும்பங்களில் குழந்தைகளை இவர் போன்ற Nanny என அழைக்கப்படும் ஆயாம்மாக்கள் தான் வளர்க்கின்றனர்.

Anant Ambani wedding Radhika Merchant

அம்பானி குடும்பத்தில் ஒரு அங்கம்: அம்பானி குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறியதற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். "எல்லோரிடமிருந்தும் நான் பெற்ற அன்பு மற்றும் ஆதரவிற்காக நம்பமுடியாத அளவிற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இது ஒரு அற்புதமான பயணம், எதிர்காலத்தில் நீங்கள் இருவரும் சிறந்த ஜோடிகளாக திகழ வேண்டும். எப்போதுமே, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து சந்தோஷமாக வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

Anant Ambani wedding Radhika Merchant

நிதா அம்பானிக்கு நன்றி: ஆனந்த் அம்பானியின் அம்மா நிதா அம்பானிக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்திற்கு என்னையும் அழைத்தற்கு நன்றி எனக் கூறியுள்ளார். மேலும், அம்பானி, நிதா அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நானி வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Anant Ambani wedding Radhika Merchant

கோடிக்கணக்கில் செலவு: தனது இளைய மகன் திருமணத்தை உலகத்திலேயே யாரும் செய்யாத அளவுக்கு செலவு செய்து அம்பானி நடத்தியுள்ளார். இளவரசர் பிரின்ஸ் மற்றும் டயானாவின் திருமண செலவு கூட 1500 கோடி ரூபாய் தான் ஆனது என்றும் 5000 கோடி ரூபாயில் இந்த திருமணம் நடைபெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X