அம்பானி வீட்டு கல்யாணம்! கலந்து கொண்ட பிரபலங்களுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க வாட்ச் பரிசு -வீடியோ

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் முதன்மை பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இரண்டு நாட்களுகு முன்னர் அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பிரபலங்கள் வரவழைக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதற்காக அம்பானி மற்றும் மெர்சண்ட் குடும்பத்தினர் பல லட்சம் கோடிகளை செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மணமக்கள் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண விழா தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்தபடி உள்ளது. குறிப்பாக இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கின்றேன் என்ற உறுதி மொழியை வாசித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

Anant Ambani Wedding Gifts Shahrukh Khan Ranveer Singh

பிரதமர்: குறிப்பாக பிரதமர் மோடி திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் திருமணத்தையொட்டி உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினர்.

திரைப்பிரபலங்கள்: இந்த திருமண விழாவில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அமீர் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், கிருதி சனோன், அனன்யா பாண்டே, ஷனாயா கபூர், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, வருண் தவான், ரன்வீர் சிங், ரஜினிகாந்த், அனில் கபூர், மற்றும் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

தென்னிந்திய பிரபலங்கள்: அதேபோல் நயன்தாரா, விக்னேஷ் சிவன், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், நடிகர் பிருத்விராஜ் தனது மனைவியுடனும், மகேஷ் பாபு தனது மனைவியுடனும், நடிகர் யாஷ் தனது மனைவியுடனும் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பரிசு: திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியவர்களை திருமண வீட்டார் தங்களது வசதிக்கு அல்லது சிந்தனைக்கு ஏற்ப எதாவது ஒன்றைக் கொடுத்து அனுப்புவார்கள். ஒரு சிலர் புத்தகங்கள் கொடுப்பார்கள், சிலர் பத்திரங்கள் கொடுப்பார்கள், சிலர் மரக்கன்றுகள் கொடுப்பார்கள் இப்படிக் எதாவது ஒன்று கொடுப்பார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர் வெற்றிலை பாக்கு கொடுத்து, திருமணத்திற்கு வந்தவர்களை வழி அனுப்புவார்கள்.

ரூ. 2 கோடி வாட்ச்: ஆனால் நடைபெற்றது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான அம்பானி வீட்டு திருமணம் என்பதால், திருமணத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 2 கோடி மதிப்பிலான கடிகாரத்தினை பரிசாகக் கொடுத்துள்ளனர். Audemars Piguet நிறுவனத்தின் கடிகாரத்தினை அம்பானி குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

தங்க வாட்ச்: இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் உலா வருகின்றது. அம்பானி குடும்பத்தினர் வழங்கியுள்ள இந்த கடிகாரத்தில், நேரம் பார்ப்பது மட்டும் இல்லாமல் காலநிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். லீப் ஆண்டுக்கு ஏற்ற வகையில் செட் செய்து பயன்படுத்தலாம். மேலும் தேதி, கிழமை ஆகிவையும் இந்த கடிகாரத்திலேயே இடம் பெற்றுள்ளது. 18 கேரட் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச் பார்ப்பதற்கே கண்களைக் கவர்கின்றது. இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்களில் வாட்ச் மிளிர்வதைப் பார்க்கையில், 2 கோடிக்கு இந்த வாட்ச் வொர்த் தான் என கூறவைக்கும் அளவிற்கு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X