»   »  ஆனந்த பாபு தேறுகிறார்

ஆனந்த பாபு தேறுகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ஆனந்தாபாபு உடல் நலம்தேறி வருகிறார்.

பழம் பெரும் நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த பாபு கவலைக்கிடமான நிலையில் வேலூர் சிஎம்சிமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த பாபு சிறிது காலமாகவே மன நலமும் பாதிக்கப்பட்டிருந்தார்.இடையில் கொஞ்சம் தேறினார்.

ஆனால், மீண்டும் அவருக்கு மன நல பாதிப்பு தீவிரமானதால் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால், உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்குக் கொண்டுசேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் உடல் நிலை தேறி வருகிறது.

Read more about: actor anantha babu recovers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil