»   »  நலமாக இருக்கிறேன்: ஆனந்தபாபு

நலமாக இருக்கிறேன்: ஆனந்தபாபு

Subscribe to Oneindia Tamil

வலிப்பு ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டேன். மற்றபடி என்னைப் பற்றிவெளியான தகவல்கள் தவறானவை. இப்போது நலமாக உள்ளேன் என்று நடிகர்ஆனந்தபாபு கூறியுள்ளார்.

பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் நடிகர் ஆனந்தபாபு. ஒரு காலத்தில் பிரபலநடிகராக திகழ்ந்த ஆனந்தபாபு, நடனத்தால் அறியப்பட்டார்.

ஆனால் பிரபுதேவா போன்றவர்களின் வருகைக்குப் பின்னர் ஆனந்தபாபுவின் நடனம்ரசிக்கப்படாமல் போனது. இதனால் பட வாய்ப்புகளை இழந்த ஆனந்தபாபு, தனதுதந்தைக்குச் சொந்தமான நாகேஷ் தியேட்டர் நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்.

அத்தோடு தன்னைத் தேடி வந்த சிறு சிறு பட வாய்ப்புகளையும் தட்டாமல் நடித்துவந்தார். இந்த நிலையில்சமீப காலமாக அவர் பெரும் மன உளைச்சலுக்குஆளாகியிருந்ததாகவும், இதனால் அடிக்கடி மன நலம் பாதிக்கப்படும் அளவுக்குஅவரது நிலை இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்தச் சூழ்நலையில் சமீபத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்பாது ஆனந்தபாபு உடல் நலம் தேறியுள்ளார். ஓய்வுக்காக தனது குடும்பத்தினருடன்பெங்களூர் சென்றுள்ளார். பெங்களூர் செல்வதற்கு முன் வேலூர் மருத்துவமனையில்செய்தியாளர்களை ஆனந்தபாபு சந்தித்தார்.

சோர்வாக காணப்பட்டாலும் சந்தோஷமாக இருந்த ஆனந்தபாபு கூறுகையில், கடந்த12ம் தேதி பிரார்த்தனைக்காக பேராலயத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குரத்த அழுத்தம் அதிகமாகி வலிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுநினைவில்லை.

இதையடுத்து நான் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்குஎனக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நான் உடல்நலம் தேறியதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டேன்.

தற்போது உடல் நிலம் தேறியுள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன். ஓய்வுக்காககுடும்பத்தினருடன் பெங்களூர் செல்கிறேன். என்னைப் பற்றி தவறான பல செய்திகள்பரவி விட்டது எனக்கு வேதனையாக உள்ளது.

நான் நலமாகத்தான் இருக்கிறேன் என்றார் ஆனந்தபாபு.

பின்னர் ஆனந்தபாபு, அவரது மனைவி சாந்தி, மகன்கள் பிஜேஷ், கஜேஷ், யோகேஷ்,மகள் சுப்ரினா ரெஜினா ஆகியோருடன் ஆனந்தபாபு பெங்களூர் கிளம்பிச் சென்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil