»   »  கடனுக்கு பயந்து ஆனந்த்பாபு அட்மிட்?

கடனுக்கு பயந்து ஆனந்த்பாபு அட்மிட்?

Subscribe to Oneindia Tamil

கடனுக்கு பயந்தும், தப்பிக்கவும் தான் நடிகர் ஆனந்த்பாபு வேலூர் சிஎம்சி மனநல மருத்துவனையில்சிகிச்சைக்காக சேர்ந்துவிட்டதாக பெற்றுவருவதாக தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனந்த் பாபுவுக்கு திடீரென கல்லீரல் மற்றும் பித்தப்பை பாதிக்கப்பட்டதாக கடந்த 12ம் தேதி முதல் வேலூர்சிஎம்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

பின்பு கடந்த 18ம் தேதி ஆனந்த் பாபுவை அவரது தந்தை நாகேஷ் மற்றும் குடும்பத்தினர் பெங்களுர்,மல்லேஸ்வரத்தில் உள்ள இயற்கை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவருக்கு சிக்ச்சைஅளிக்க டாக்டர்கள் மறுத்தவிட்டனர்.

மருத்துவமனைக்கு வெளியே ஆனந்த்பாபு

ஆனந்த் பாபு மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு முதலில் சிகிச்சை பெற்றால் தான், அவருக்குவந்துள்ள பிற நோய்களை குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து ஆனந்த்பாபு மீண்டும் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் முழுஓய்வில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் இருக்கும் ஆனந்த் பாபுவை சந்திக்க ஆந்திராவைச் சேர்ந்த பட தயாரிப்பாளர்கள் சின்னகிருஷ்ணாரெட்டி, குப்புராஜ், வெங்கட்ப்பா, குஞ்சப்பன் உள்பட ஆறு பேர் வந்தனர்.

அவர்களை சந்திக்க ஆனந்த் பாபு மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த தெலுங்கு பட தயாரிப்பாளர்கள்நிருபர்களிடம் கூறியதாவது,

ஆனந்த் பாபு சினிமா தயாரிக்க எங்களிடம் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 76 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.அதற்கு அசலையும், வட்டியையும் செலுத்தவில்லை. பலமுறை கேட்டுப் பார்த்தோம். அவரிடம் இருந்து சரியானபதில் வரவில்லை.

ஆனந்த் பாபு மருத்துவமனையில் வந்து படுத்துக் கொண்டார். அவருக்கு நிஜமாகவே உடல் நிலை சரியில்லையாஎனத் தெரியவில்லை. அவர் எங்களுக்கு கொடுக்க வெண்டிய பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.

வாங்கிய கடனைத் தர பயந்து அவர் மருத்தவமனையில் சிகிக்சை பெற்று வருவது போல எங்களை ஏமாற்றிவருகிறார். கொடுத்த கடனை வாங்காமல் விடமாட்டோம். பல்வேறு காரணங்களைச் சொல்லி, எங்களை பார்க்கஆனந்த் பாபு மறுத்துவிட்டார் மீண்டும் வந்து அவரைப் பார்ப்போம் என்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil